முத்துப்பாண்டியை கொல்ல வந்த சண்முகம்… அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் முத்துப்பாண்டியை வெட்டி கொல்ல ஷண்முகம் ஆவேசமாக கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீட்டில் சௌந்தரபாண்டி காரியமெல்லாம் கெட்டுப்போச்சு திட்டமெல்லாம் நாசமா போச்சு என முத்து பாண்டியை திட்டிக் கொண்டிருக்க பரணி போன் செய்து சண்முகம் பயங்கர கோபத்துடன் முத்துப்பாண்டி கொல்ல வரும் விஷயத்தை சொல்லி உஷார் படுத்துகிறாள்.
இதனால் வீட்டில் ஜன்னல் கதவு அனைத்தையும் மூடி உள்ளே பத்திரமாக இருக்க கோபமாக வந்த சண்முகம் கதவை திறக்க சொல்லி சத்தம் போட முத்து பாண்டி இங்கே இல்லை என சொல்கின்றனர். ஆனால் சிவபாலன் மாமா அவன் உள்ள தான் இருக்கான் அவனை விடாத கொல்லு என கூறுகிறான்.
அதே சமயம் பரணி வந்து சண்முகத்தை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். வீட்டுக்கு வந்த சண்முகத்திலும் இசக்கி அவனை கொன்னுட்டியா அண்ணா என்று கேட்க இல்ல அவன கொல்லுற வரைக்கும் இந்த தாலி கழுத்திலே இருக்கட்டும் என கூறுகிறான்.
பரணி சண்முகத்திடம் அன்பாக பேச முயற்சி செய்ய உன் அண்ணனை காப்பாத்த இப்படி செய்யாத என சண்முகம் கோபப்படுகிறான். என்ன இருந்தாலும் அவன கொல்லாமல் விட மாட்டேன் என்று புலம்ப பரணி ஊசி போட்டு அவனை தூங்க வைக்கிறாள்.
மறுபக்கம் சௌந்தரபாண்டி பாண்டியம்மா ஆகியோர் பாக்கியத்துக்கு கொடுக்க வைத்திருந்த விஷயத்தை கனி மாத்தி குடிச்சிட்டா என்று பேசிக் கொண்டிருக்க இதை சிவபாலன் கேட்டுவிட இதை இவர்கள் யாரோ ஒட்டு கேட்டு விட்டதாக உணர்கின்றனர்.
உடனே இந்த விஷயங்கள் வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் அவன் யாருன்னு கண்டுபிடிச்சு கொன்னுடனும் என்று சொல்ல சிவபாலன் எஸ்கேப் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.