சால்வையை எறிந்த விவகாரம்… நடிகர் சிவகுமார் வெளியிட்ட புது வீடியோ!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மூத்த அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், பழ நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவகுமார், குடிநீரை காப்பதற்காக பழ. கருப்பையா முன்னெடுத்த போராட்டத்தை நினைவுகூர்ந்தார்.
அப்போது திடீரென தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு மேடையில் அமர்ந்திருந்த பழ. கருப்பையாவை நோக்கி நடந்த சிவகுமார், அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு, மீண்டும் வந்து தனது உரையை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியின் முடிவில் வயதான ரசிகர் ஒருவர் நடிகர் சிவகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க வந்தார்.
அப்போது அந்த ரசிகர் போட வந்த பொன்னாடையை தடுத்த சிவகுமார், அந்த பொன்னாடையை தூக்கி வீசிவிட்டு சென்றார். இந்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர் செய்வதறியாது மனவேதனையடைந்தார். சில வருடங்களுக்கு முன் இதேபோல் ரசிகர் ஒருவர் சிவகுமாருடன் செல்பி எடுக்க வந்தபோது, சிவகுமார் செல்போனை பிடிங்க தூக்கி வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தற்போது இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அந்த நபருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.