ரூ2.55 கோடி காரை இந்தியாவில் வாங்கிய முதல் பெண்மணி இவங்க தான்! இது என்ன கார்ன்னு தெரியுதா?
லோட்டஸ் என்ற கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தனது பிசினஸை துவங்கி தனது முதல் காரை வெற்றிகரமாக ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் முதல் காரையே விற்பனை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சீனாவை சேர்ந்த கீலீ நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருப்பது தான் லோட்டஸ் என்ற கார் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் முதல்முறையாக கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இந்தியாவில் களமிறங்கியது. அப்பொழுது தன் முதல் காராக எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான எலட்ரி என்ற காரை அறிமுகப்படுத்தியது.
அப்பொழுதே பலர் இந்த காரை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள், வெகு குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் விற்பனையாகும் என பேசினார்கள். இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான். இந்த கார் ரூபாய் 2.55 கோடி என்ற விலையில் அறிமுகம் ஆகி உள்ளது.
கோடிக்கணக்கிலான பணம் கொடுத்து கார் வாங்கும் நிலையில் வெகு சில மக்களை இந்தியாவில் இருப்பதால் அவர்கள் மட்டுமே இந்த காரை வேண்டுமானால் வாங்கலாம் என பேசி வந்தனர். இதனால் கடந்த நவம்பர் மாதமே இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகமானாலும் முதல் காரை விற்க சுமார் இரண்டு மாதங்கள் வரை எடுத்துக் கொண்டது. இந்த மாதம் தான் வெற்றிகரமாக நிறுவனம் தனது முதல் கரையே விற்பனை செய்துள்ளது.
லோட்டஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான எலட்ரி காரை ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சொந்தமாக வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது கார் கிரேசி இந்தியா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. லோட்டஸ் நிறுவனத்தின் இந்த காரின் பிரதான நிறமாக மஞ்சள் நிறம் தான் இருந்தது. ஆனால் இதன் உரிமையாளர் சிவப்பு நிற கார் வேண்டும் என கேட்டு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ரூ2.55 கோடி கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த காரில் என்ன ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த தகவல்களை தெரிந்தால் நீங்கள் நிச்சயம் இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள். அதைப் பற்றி பார்ப்போம். லோட்டஸ் என்ற நிறுவனம் சின நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தாலும் இந்நிறுவனம் பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமாகவே இருக்கிறது. இந்நிறுவனம் மூன்று வேரியன்டுகளில் இந்த எலெட்ரி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரி, எலக்ட்ரி எஸ், எலக்ட்ரி ஆர், ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இதன் வெளிப்புற வடிவமைப்பை பொறுத்தவரை முன் பக்கம் ஃபெராரி கார் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. அந்த காரை போலவே ஹெட்லைட் செட்டப்கள், எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. பெரிய சைஸ் பானட்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் லோட்டஸ் நிறுவனத்தின் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஏரோ வடிவ டிஆர்எல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஹெட்லைட் எல்இடி ஹெட்லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. உள்பக்கம் கீழ் பகுதியில் ஹெவியான ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஆக்டிவ் கிரில் பகுதி, பெரிய ஏர் இன்டேக் ஆகியன முன்பகுதியில் உள்ளன. பக்கவாட்டு பகுதியை பொருத்தவரை இந்நிறுவனத்தின் சிறப்பான வடிவமைப்பு நமக்கு தெரிகிறது. ஹெவியான கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. 22 இன்ச் 10 ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் உட்பகுதியை பொருத்தவரை ஏகப்பட்ட அட்வான்ஸ் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. சொகுசு வசதியாகவும் சுலபமாக இயக்கும் வகையிலும் பல்வேறு வசதிகள் இந்த காரில் உள்ளன. இதன் இன்ஜினை பொறுத்தவரை 112 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது டூயல் மோட்டார் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 600 பிஎச்பி பவரும் 710 என்எம் டார்க் திறனையம் வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை நிற்காமல் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் தான் உலகிலேயே வேகமான எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராக இருக்கிறது. அதிகபட்சமாக 258 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு திறன் கொண்ட இந்த காருக்கு இந்தியாவில் இறக்குமதி வரியுடன் சேர்த்து ரூபாய்2.55 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.