சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க்.. நடிகை ராஷ்மிகாவின் ஸ்கின் கேர் சீக்ரெட்…

சரும பராமரிப்பு என்று வந்துவிட்டால் வெவ்வேறு வகையான உத்திகளை நாம் பரிசீலனை செய்வோம். பெரும்பாலும் நம் வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சரும பராமரிப்பை மேற்கொள்ள நாம் முக்கியத்துவம் கொடுப்போம்.

பொதுவாக எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய கடலை மாவு மாஸ்க் தொடங்கி, பப்பாளி மாஸ்க், மில்க் ஷேக் மாஸ்க் என்று வெவ்வேறு விதமான உத்திகளை நாம் கடைபிடிப்போம். முதலில் ஓரிரு நாட்களுக்கு இவற்றை ஆர்வமாக செய்தாலும், அதற்குப் பிறகு நேரமின்மை காரணமாக இவற்றை நம்மால் தொடர்ந்து செய்ய இயலாது. நாளடைவில் முகம் பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்படும். இதனால்தான் மிக எளிமையான உத்தி ஒன்றை நடிகை ராஷ்மிகா மந்தனா கடைப்பிடித்து வருகிறார். நினைத்த நிமிடத்தில் இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஷீட் மாஸ்க் :

மேம்படுத்தப்பட்ட ஆரோக்கிய திரவங்களில் நினைத்த மெல்லிய துணி ஒன்றைக் கொண்டதாக ஷீட் மாஸ்க் இருக்கிறது. சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை வழங்கும் வகையில் இந்த மாஸ்க் உருவாக்கப்படுகிறது.

இந்த மாஸ்க் பயன்படுத்த நாம் தயாராகுவதற்கும், அதை முகத்தில் அப்ளை செய்வதற்கும் அதிக நேரம் பிடிப்பதில்லை என்பதால் தற்போது எண்ணற்ற மக்கள் இதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என்று சரும நோய் சிகிச்சை நிபுணர் ரிங்கி கபூர் தெரிவிக்கிறார்.

தென்கொரியாவில் அழகு சாதன நடவடிக்கைகளுக்காக பெரும்பான்மையான மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் இந்த பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த அழகு சாதன மருத்துவர் ப்ரீத்தி சாஹ்ரி கூறுகையில், “சருமத்திற்கு துரிதமாக விட்டமின்கள் மற்றும் ஈரப்பதம் கொடுக்கக் கூடியதாக ஷீட் மாஸ்க் உள்ளது. சிறப்பான பலன்களை விரைவாக கொடுக்கக்கூடிய உத்தியாக இது இருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஷீட் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் :

1. நம்முடைய சருமத்திற்கு நீர்ச்சத்து கொடுக்கக்கூடிய தன்மை இந்த மாஸ்கில் உள்ளது. வெளியே அலைந்து திரிந்து வரும் சமயங்களில் உடனடி நிவாரணியாக இது நீர்ச்சத்தை சருமத்திற்கு கொடுக்கும்.

2. சரும ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் போன்றவை இருப்பதால் பளபளப்பை துரிதமாக தரும்.

3. ஷீட் மாஸ்கில் விட்டமின் சி, விட்டமின் ஈ, ஹைலோரோனிக் அமிலம் போன்றவை இருப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

4. எரிச்சல் மிகுந்த சருமத்திற்கு இது குளிர்ச்சியை கொடுக்கும்.

5. சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பு அரண் போல செயல்படும்.

6. எண்ணெய் பிசுக்கு ஏற்படுவதை தடுக்கும் மற்றும் பயன்படுத்துவதற்கு மிக எளிமையானது.

தூய்மையான தண்ணீர் வைத்து முகத்தை கழுவவும். அந்த ஈரத்தை காய விடவும். பின்னர் நேரடியாக ஷீட் மாஸ்க் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் மாஸ்க் எடுத்துவிட்டு லேசாக மசாஜ் செய்து விட்டால் போதுமானது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரு முறை அல்லது அதிகபட்சமாக மூன்று முறை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *