பிப்.15 முதல் மீண்டும் நாகை – காங்கேசன் துறை இடையே கப்பல் போக்குவரத்து! இந்திய அரசு அனுமதி!
நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கிரஸ் துறைமுகம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் இந்தியா-இலங்கையை இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது. ஏற்கனவே நடந்த கப்பல் போக்குவரத்தில் இருந்து தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா-இலங்கையிலேயான நட்புறவை பேணும் வகையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறை வரை கப்பல் போக்குவரத்து இருந்தது அதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து என்பது நிறுத்தப்பட்டது. பின்னர் நீண்ட ஆண்டுகளாக அங்கு உள்நாட்டு பிரச்சினை ஏற்பட்டு தற்போது தான் அமைதி திரும்பி உள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து என்பது மீண்டும் துவங்கப்பட்டது. அப்பொழுது பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக இந்த கப்பல் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.
அப்பொழுது செரியாபாணி என்ற கப்பல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி ஒரே நேரத்தில் அந்த கப்பலில் 150 பேர் வரை பயணிக்க முடியும். ஒரு நபருக்கு 60 கிலோ வரை எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என கூறப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்ட முதல் நாளில் 70 பேர் பயணம் செய்தனர்.
ஆனால் இந்த கப்பல் போக்குவரத்து நீண்ட நாட்களாக நீடிக்கவில்லை. கப்பல் போக்குவரத்து துவங்கிய 6 நாளில் அக்டோபர் 20ஆம் தேதியுடன் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் காரணமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு 2024-ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி இந்திய அரசு காங்கேசன் துறை மற்றும் நாகை இடையே கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இதையஎடுத்து வரும் பிப்ரவரி 15-ம் தேதி நாகை-இலங்கை இடையே கப்பல் சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை அரசு இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஏற்கனவே பயன்படுத்த செரியாபாணி கப்பல் பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக சிவகங்கை என்ற கப்பல் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலிலும் 150 பேர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்திற்கான டிக்கெட் கட்டணம் விபரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய மதிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லவும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வரவும் ஒரு முறை பயணத்திற்கு ரூபாய் 6,600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல விமான சேவைகளை காட்டிலும் இந்த கப்பல் மூலம் இலங்கைக்கு பயணிப்பது என்பது குறைவான கட்டணம் தான் என்பதால் பலரும் இதில் பயணிக்க விரும்புகிறார்கள். குறிப்பாக இலங்கையில் இருந்து வந்த அகதிகள் மீண்டும் தங்கள் சொந்த பந்தங்களை பார்க்க செல்லவும், இலங்கையில் உள்ள அவர்களது இடத்திற்கு செல்லவும் இந்த கப்பல் மிகவும் பயன்படும் என தெரிகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை மற்றும் இந்தியா இடையேயான நல்லுறவை போற்றும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்து என்பது நடத்தப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் உள்ள மக்கள் மத்தியில் நட்புறவை ஏற்படுத்தும். இது இரு நாடு மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இந்த கப்பல் போக்குவரத்தை விரைவில் விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.