ஷிவ் நாடார், அசிம் பிரேம்ஜி சாதனைகளை தூள் தூளாக உடைத்த பெண்..!!

ஷிவ் நாடார், அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி ஆகியோர் நம் நாட்டில் புகழ்பெற்ற நன்கொடையாளர்கள் ஆவர். உலகளவில் நீண்டகாலமாக நன்கொடைகளில் ஈடுபட்டவர்களில் இவர்களது பெயரும் இடம் பெற்று வருகிறது.

இதனிடையே ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலில் சுஷ்மிதா பாக்சி, சுப்ரதோ பாக்சி என்ற ஒரு தம்பதி இடம் பெற்றுள்ளனர், 2023 ஆம் ஆண்டு ஈடல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்த தம்பதியர் 6 ஆவது இடத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு அவர்கள் ரூ.110 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். இது தவிர தனிப்பட்ட முறையில் சுஷ்மிதா பாக்சி ரூ.213 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையை சமூக நலனுக்காக தானமாக அளித்தபோதிலும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கவே சுஷ்மிதா பாக்சி விரும்புகிறார்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் சுஷ்மிதா பாக்சி பிறந்தார். அவரது தாயார் பிரபல எழுத்தாளர் சகுந்தலா பண்டா ஆவார். தனது தாயின் எழுத்தால் கவரப்பட்ட சுஷ்மிதாவும் சிறந்த ஒடியா எழுத்தாளரானார். சுசரிதா என்ற மாத இதழையும் நடத்தி வருகிறார்.

பொலிட்டிகல் சயின்ஸில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள சுஷ்மிதா தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றினார்.

சுஷ்மிதாவுக்கு 15 வயது இருக்கும்போது அவரது கணவரான சுப்ரதோ பாக்சி அறிமுகமானார். அதற்கடுத்த நான்காண்டுகளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சுஷ்மிதாவின் படைப்புகள் முதலில் பல இதழ்களில் வெளியாகின . அம்மாவைப் போலவே இலக்கியத் துறையில் நுழைந்தார் சுஷ்மிதா. மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக சுஷ்மிதா பாக்சி விளங்குகிறார், மேலும் அவர் ஒரு திறமையான எழுத்தாளர்.

பயணக் குறிப்பு, பல சிறுகதைகள் தொகுப்பு, ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். ஆங்கிலம் மற்றும் ஒடியாவில் சுஷ்மிதா எழுதுகிறார்.

சுஷ்மிதா, சுப்ரதோ பாக்சி, ராதா, என்.எஸ் பார்த்தசாரதி மற்றும் பிற மைண்ட்ட்ரீ இணை நிறுவனர்கள், அறக் கொடையாளர்கள் 2022 ஆம் ஆண்டில் சுகாதாரத் தொழிலின் முன்னேற்றத்துக்காக மொத்தம் ரூ. 213 கோடியை நன்கொடையாக வழங்கினர். 2023 ஆம் ஆண்டில், சுஷ்மிதாவும் சுப்ரதோவும் ரூ. 110 கோடி நன்கொடை அளித்தனர்.

உளவியல் ஆரோக்கிய பிரச்னையை கையாளும் எவரும் அல்லது எந்தவொரு குடும்பமும் தனது முதல் ஆங்கில நாவலின் முக்கிய கதாபாத்திரமான ஒரு மனநல மருத்துவரை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று சுஷ்மிதா பாக்சி கூறுகிறார். அவரது எழுத்தின் நடை, தொடர்புத்தன்மை காரணமாக அவரது வாசகர்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *