பெங்களூர், ஹைதராபாத்திற்கு ஷாக்.. 131% வளர்ச்சியை.. ஒரே வருடத்தில் அடைந்து அசத்திய சென்னை.. மாஸ்!
2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு அதிகரித்துள்ளது.
முக்கியமாக சென்னையில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நான்கில் ஒரு பங்கிற்கு மேல் பெங்களூரில் அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் சென்னை 2 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு.. மிக அதிக அளவில் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர்.
இதன் அர்த்தம் 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை பல்வேறு ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள் வாடகைக்கு, குத்தகைக்கு சென்னையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் சென்னை முதல் முறையாக முதல் 3 இடங்களுக்குள் வந்தது என்று Colliers India அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4.6 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்த சென்னை 10.5 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை கொடுத்துள்ளது. 131 சதவிகிதம் வளர்ச்சியை சென்னை கண்டுள்ளது. 16.2 மில்லியன் சதுர அடி அளவிற்கு அலுவலகங்களை விற்ற பெங்களூர் 15.6க்கு மட்டும் விற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் மூலம் 4.20 சதவிகிதம் சரிவை பெங்களூர் சந்தித்துள்ளது.
சென்னை மட்டும்தான் 131 சதவிகிதம் வளர்ச்சியை கண்டுள்ளது. விரைவில் இந்தியாவில் ஆபிஸ் அப்சார்ப்ஷன் எனப்படும்.. அலுவலகங்களை வாடகைக்கு, குத்தகைக்கு எடுப்பதன் அளவில் சென்னை முதலிடம் பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
முதலீடு: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.
1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.
தமிழ்நாடு முதலீடு: இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு அரசு இ வாகனங்களுக்கான கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டு அதற்கான சலுகைகளையும் உடனுக்குடன் அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் வழியாக டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.