அதிர்ச்சி… மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர்… அலறி கூச்சலிட்ட பயணிகள்… !

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஜலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று மாலை மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென எங்கிருந்தோ வந்த இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் முன் குதித்தார்.

இளைஞர் ரயிலில் பாய்வதைக் கண்ட லோகோ பைலட், அவசரமாக ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அந்த இளைஞர் மீது ரயில் மோதிவிட்டது.

உடனடியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள், அவசர கால பயண முறையைப் பயன்படுத்தி பாதையில் இருந்த மின்சாரத்தை நிறுத்தினர். அத்துடன் தற்கொலை முயன்ற இளைஞரைமீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த திடீர் சம்பவத்தால் ரயில் நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயஷ்வந்தபூர் மற்றும் நாகசந்திரா இடையேயான மெட்ரோ ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் முன் இளைஞர் குதித்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்தவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஷரோன். இவருக்கு வயது 23 எனத் தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தையை இழந்துவிட்டார். 15 நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு வந்த ஷரோன் மனஉளைச்சல் காரணமாக ஷரோன், மெட்ரோ ரயில் முன் பாய்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *