அதிர்ச்சி..!! ஆப்கானிஸ்தானை நிலைகுலைய வைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! மக்களின் கதி..?
கடந்தாண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத சோகமான நினைவுகளை விட்டுச்சென்றது. மேலும், 2024 முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் என்ற அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் மற்றும் வட இந்தியா பகுதிகளிலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.