சாக்கோஸில் புழு இருந்ததால் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. கெலாக்ஸ் நிறுவனம் சொன்ன பதில் இதுதான்..
சமீப காலமாக பல்வேறு உணவு வகைகளில் புழு, பூச்சிகள் இருக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கேஃப்சி சிக்கன் தொடங்கி பாக்கெட்களில் அடைக்கப்படும் உணவுப் பொருட்களில் புழுக்கள் இருப்பதாக கூறி பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கூட டைரி மில்க் சாக்லேட்டில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது கெலாக்ஸ் நிறுவனத்தின் சாக்கோஸ் பாக்கெட்டில் புழு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
புழு இருக்கும் இந்த சாக்கோஸை சாப்பிட்டால் எனக்கு எக்ஸ்டா புரோட்டீன் கிடைக்குமா என்று இன்ஸ்டா பயனர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த வீடியோ விரைவிலேயே வைரலான நிலையில், கெல்லாக் இந்தியா நிறுவனம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பதிவில், “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம். உங்கள் கவலையைப் புரிந்துகொள்ள எங்கள் நுகர்வோர் விவகாரக் குழு உங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு இன்பாக்ஸ் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பயனர் ஒருவர் “ பல ஆண்டுகளுக்கு முன்பு இதே மோசமான தயாரிப்பில் இருந்து உயிருடன் இருந்த புழுக்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் அப்போது சமூக ஊடகங்கள் அவ்வளவு பிரபலமானவை அல்ல. எனவே நான் சோகோஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். ஆனால் அவர்கள் இன்னும் புழுக்களை விற்கிறார்கள் என்று நம்ப முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இந்த வீடியோவைப் பார்த்த தருணத்தில்.. எனது சமையலறையில் கெலாக்ஸ் பாக்கெட்டை பார்த்தேன். நல்ல வேளை அதன் காலாவதி தேதி இன்னும் முடிவடையாததால் நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றோரு பயனர் “ பேக்கெட் உணவு சாப்பிட வேண்டாம். வீட்டில் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதே போல் “உயர் புரத காலை உணவு,” மற்றொரு பயனர் கேலி செய்தார். இன்னொரு பயனர் ஒருவர், “இதே தயாரிப்பில் 2 நாட்களுக்கு முன்பு எனக்கும் அதே நடந்தது…” என்று கருத்து தெரிவித்துள்ளார்.