இத்தாலிய தேவாலயத்தில் அதிர்ச்சி சம்பவம்! பாதிரியாரை குறிவைத்த மாஃபியா?

தென் இத்தாலியில் உள்ள பாதிரியார் ஃபீலிக்ஸ் பாலமாரா, சனிக்கிழமை நடைபெற்ற திருப்பலியின் போது, தீங்கு விளைவிக்கும் பொருளை உட்கொள்வதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார்.

நூழிலையில் தப்பிய பாதிரியார்
இத்தாலியின் செசானிட்டி(Cessaniti) நகரில் உள்ள நிக்கோலா டி பன்னாகோனி தேவாலயத்தில்(Nicola di Pannaconi church) சனிக்கிழமை நடைபெற்ற வழிப்பாட்டின் போது தந்தை பெலிஸ் பலமாரா (Father Felice Palamara), கலசத்தில் இருந்த மதுவை சுவைப்பதற்கு முன்பு, அதன் கடுமையான பீளிச்(bleach) நாற்றத்தை உணர்ந்து தீங்கு விளைவிக்கும் பொருளை உட்கொள்வதை கடைசி நேரத்தில் தவிர்த்துள்ளார்.

பின்னர் ஆய்வக சோதனைகளில் கலப்படமான குளோரினின் இருப்பு உறுதி செய்யப்பட்டது, இதன் காரணமாக காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த சம்பவம் கம்மோரா குழுவுடன் தொடர்புடையது என நம்பப்படுகிறது, இது பாதிரியார் பாலமாரா பணியாற்றும் கம்பானியா பகுதியில் உள்ள பிரபலமான மாஃபியா(mafia) அமைப்பு ஆகும்.

இது முதல்முறை அல்ல!
பாதிரியார் பாலமாரா இத்தகைய மிரட்டலை எதிர்கொள்வது முதல்முறை அல்ல.

கலாப்ரியா பகுதியில்(Calabria region) நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக கடுமையான விமர்சகராக இருந்து வரும் அவர், இதற்கு முன்னதாகவும் கொலை மிரட்டல்களை பெற்றுள்ளார். அவரது கார் சமீப காலங்களில் இரண்டு முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாதிரியார் பாலமாரா, “revenge is love” என பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *