அதிவேகத்தில் காரை ஓட்டி பெண் மீது வேண்டுமென்றே மோதிய அதிர்ச்சி சம்பவம்! 13 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் கைது
அமெரிக்காவில் பாதசாரிகள் மீது காரை மோதிய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
அதிர்ச்சி சம்பவம்
சியாட்டல் நகரில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இரவு, இரண்டு பாதசாரிகள் மீது கார் ஒன்று அதிவேகத்தில் மோதியது.
முதல் சம்பவத்தில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது கார் மோதியது. பெண் மீது கார் மோதுவதற்கு முன் உள்ளே இருந்து அவளை இடி என்று சிலர் கூறுகின்றனர்.
இரண்டாவது சம்பவத்தில் பேருந்து பாதையில் நடந்து கொண்டிருந்த மற்றொரு பாதசாரி மீது கார் வேகமாக மோதியது. காரின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியளித்தன.
சிறார்கள் கைது
வீடியோ ஆதாரங்கள் மூலம் விசாரணையை நடத்திய சியாட்டில் பொலிஸார் 13 வயது சிறுமியையும், 15 வயது சிறுவனையும் கைது செய்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் திருடப்பட்ட கார் என்றும், பாதசாரிகளை தாக்கிய பின்னர் கடுமையான காயங்களுடன் காரில் இருந்தவர்கள் அவர்களை விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சிறார்கள் குடும்ப நீதி மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.