அதிர்ச்சி… மின்கம்பம் மீது மோதி அரசு பேருந்து ஓட்டுநர் பலியான சோகம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் கூடலூர் மற்றும் பந்தலூர் என தாலுகாக்கள் உள்ளன. மலை பகுதியான கூடலூர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமலையிலிருந்து பல்வேறு மலை கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல கூடலூரில் இருந்து5.20 மணிக்கு பந்தலூர் வழியாக அய்யன் கொல்லி பகுதிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. இதில் 81 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் மளவன் செல்லும்போது பேருந்தில் 20 பயணிகள் சென்றுள்ளனர் சேரம்பாடி அருகில் செல்லும்போது எதிரே ஒரு வாகனம் வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாகனத்திற்கு அரசு பேருந்து வழிவிடும்போது எதிரே இருந்த மின்கம்பம் தெரியாமல் மின்கம்பத்தில் மோதியது. அப்போது பேருந்துக்கு ஏதும் பழுதடைந்ததா என ஓட்டுநர் நாகராஜ் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பயணி பாலாஜி இருவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி உள்ளனர் இருவர் மீது மின் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.
நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த மீதமுள்ள பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்தப் பகுதி என்பது யானைகள் நடமாட்டம் மற்றும் கிராமங்கள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் வாகனத்தில் குறைவான பயணிகள் மட்டுமே வந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற சேரம்பாடி காவல்துறையினர் இரு உடல்களை மீட்டு தற்போது பந்தலூர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் தினத்தன்று அரசு பேருந்தில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் மற்றும் பயணி உயிரிழந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் ஏற்படுத்தி உள்ளது.