மீட்டர் பற்றாக்குறையா? இனி கவலை வேண்டாம்… மின்சார வாரியத்தின் புதிய திட்டம்..!
தமிழக அரசு துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் மின்சாரத்தை தமிழக மின் வாரியம் சார்பில் மீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு கணக்கெடுக்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மீட்டர்களுக்கு வைப்பு தொகையாக வீடுகளுக்கு தரைக்கு அடியில் மின்சாரம் வழங்கும் இடங்களில் ஒரு முனை இணைப்புக்கு, 765 ரூபாய்; மும்முனைக்கு, 2,045 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் மீட்டருக்கு பற்றாக்குறை நிலவியுள்ளது. எனவே தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை நுகர்வோர்களே வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமீபத்தில், 8.50 லட்சம் ஒரு முனை மீட்டர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, 20 லட்சம் மீட்டர்கள் வாங்க, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதால், மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர், தாங்களே தனியாரிடம் மீட்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு முனை மீட்டர் விலை, 970 ரூபாய்; மும்முனை மீட்டர், 2,610 ரூபாய்; மீட்டரை வாங்கியதும், மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும். அதை சோதித்து, மீட்டர் பொருத்தப்படும். அந்த நுகர்வோரிடம், மீட்டர் வைப்பு தொகை வசூலிக்கப்படாது என மின்வாரிய அதிகாரி கூறியுள்ளார்.