ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஷாட்கன் 650 பைக்… இதன் விலை எவ்வளவு தெரியுமா?
ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று ஷாட்கன் 650 (Shotgun 650) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்.
தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள் பிரிவிற்கு அதிக வரவேற்பு காணப்படுவதால் இந்த புதிய ஷாட்கன் பைக் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 650சிசி இஞ்சினில் இயங்கும் இண்டர்செப்டார் (Interceptor), கண்டினெண்டல் ஜிடி (Continental GT) மற்றும் சூப்பர் மீடியார் (Super Meteor) என ஏற்கனவே மூன்று பைக்குகள் இருக்கும்பட்சத்தில் தற்போது நான்காவதாக ஷாட்கன் 650 பைக் புதிதாக சேர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் ஷாட்கன் 650 பைக்கை அறிமுகப்படுத்தியபோதே மார்க்கெட்டில் பரபரப்பு உண்டானது. தற்போது அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் ஷாட்கன் 650 பைக் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3.5 லட்சமாகும்.
சிறப்பம்சங்கள் மற்றும் இஞ்சின் :
ஷாட்கன் 650 பைக்கின் வடிவமைப்பு சூப்பர் மீடியார் போல் இருந்தாலும், அதன் தனித்துவமான உடலமைப்பு மற்ற பைக்குளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. 13.8 லிட்டர் அளவுகொண்ட பெரிய பெட்ரோல் டேங்க், சைடு பேனல், பின்பக்க தடுப்புகள் போன்றவை தனித்து தெரிகின்றன.
தற்போதைய காலத்திற்கு ஏற்றார்ப் போல் ஹெட்லைட்டை சுற்றிலும் அலுமினிய கவர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்ரோ அழகியலுடம் இருந்தாலும் மாடர்ன் தோற்றத்தை தருவதிலும் இந்த பைக் நம்மை கவர்கிறது. முதலில் இந்த பைக்கின் தோற்றம் க்ரூ ,ஸர் பைக் போல் தான் இருந்தது. ஆனால் பின் இருக்கையை வெளியே இழுத்த பிறகு முற்றிலும் bobber மாடலாக உருமாறிவிட்டது.
பைக்கிலுள்ள பாகங்களைப் பொறுத்தவரை ஷாட்கன் 650 பைக்கிற்கும் சூப்பர் மீடியார் 650 பைக்கிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. இரண்டு பைக்குகளுமே ஒரேப்போன்ற ஹெட்லைட், பின்பக்க லைட், இண்டிகேட்டர், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், ஸ்விட்ச்கியர், அட்ஜஸ்ட் செயும் வகையிலான பிரேக் மற்றும் க்ளட்ச் லிவர் உள்ளது. எனினும் ஷாட்கன் 650 பைக்கின் முன்பக்கம் சிறியதாக 18 இன்ச் வீலும் பின்பக்கம் 17 இன்ச் வீலும் உள்ளது.
சஸ்பென்சனை பொறுத்தவரை, சூப்பர் மீடியாரில் உள்ளது போல ட்வின் ஷாக் யூனிட் இருந்தாலும் தற்போது அது கொஞ்சம் நீளமாக இருக்கிறது. முன்பக்க ஃபோர்கின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணம் செய்யும் போது எந்த மாறுபாடும் தெரியவில்லை. அதேப்போல் ஷாட்கன் பைக்கில் புதிய பிரேக்கிங் அமைப்பு உள்ளது.
648சிசி ஏர் கூல்ட் ட்வின் இஞ்சினில் இயங்கும் ஷாட்கன் 650 பைக், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் அதிகபட்சமாக 46 bhp பவரையும் 52 Nm இழுவிசையும் கொண்டுள்ளது. இந்தப் பைக்கின் மைலேஜைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 22கி.மீ தரும் என ராயல் என்ஃபீல்ட் தரப்பில் கூறப்படுகிறது.