திருமணத்திற்கு பின் ஆதார் அட்டையில் குடும்ப பெயரை மாற்ற வேண்டுமா?
இந்திய மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. தற்போது அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் திருமணத்திற்கு பின் பெண்கள் தங்களுடைய குடும்ப பெயரை மாற்றாமல் இருக்கின்றனர். அது சரியா என அனைவர் மத்தியிலும் கேள்வி இருக்கிறது.
நீண்ட காலமாகவே பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் கணவரின் குடும்பப்பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து வருகின்றனர். ஆனால் அது சட்டப்படி தேவையில்லை. இருப்பினும், ஒரு பெண் தனது கணவரின் குடும்பப்பெயரை தனது பெயருடன் சேர்த்தால் அவருடைய எல்லா ஆவணங்களிலும் புதிய குடும்பப்பெயரை புதுப்பித்துக்கொள்வது முக்கியம். அத்தகைய சூழ்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள குடும்பப் பெயரையும் மாற்றுவது அவசியம்.
அது அவசியமாக இருந்தாலும் விதிமுறைப்படி, திருமணத்திற்கு பின் பெயரை மாற்றுவது கட்டாயம் இல்லை. பெண்கள் குடும்ப பெயரை மாற்றுவதும், மாற்றாமல் இருப்பதும் அவர்களின் விருப்பம் தான். அப்படி பெண்கள் ஆதாரில் பெயரை மாற்றினால், எல்லா ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும். அதற்கு ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யலாம்.
ஆதார் சேவை மையத்துக்குச் சென்று இதுபோன்ற அப்டேட்களை அப்டேட் செய்வது நல்லது. ஏனெனில், பெயர் உள்ளிட்ட பயோமெட்ரிக் அப்டேட்களை நாமே செய்ய முடியாது.