அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா? இந்த பொருட்களை இப்படி பயன்படுத்துங்க!

தழும்புகள் மறைய வேண்டுமா? இந்த பொருட்களை இப்படி பயன்படுத்துங்க

ம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வேண்டுமா? இந்த பொருட்களை இப்படி பயன்படுத்துங்க!

அம்மை நோயினால் நமக்கு ஏற்பட்ட தழும்புகள் மறைய செய்ய என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

அம்மை நோய் பொதுவாக வெயில் காலங்களில் அதிகம் ஏற்படும். அம்மை நோய் வந்து விட்டால் பெரிய பெரிய கட்டிகள் ஏற்படும். அது நாளடைவில் உடைந்து தழும்பாக மாறி விடும். ஒரு சிலருக்கு மறையும். ஒரு சிலருக்கு மலையில் அப்படியே உடலில் இருக்கும். அவ்வாறு அம்மை நோய் ஏற்பட்டு உடலில் மறையாமல் இருக்கும் தழும்புகளை மறைய செய்ய பயன்படும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் தயார் செய்யும் முறை பற்றியும் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

கருவேப்பிலை
கசகசா
கஸ்தூரி மஞ்சள்

செய்முறை…

முதலில் மிக்சி ஜான் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கசகசாவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக அதில் கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு சேர்த்து அரைக்க வேண்டும். இதோ அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்பை மறைக்கும் மருந்து தயார்.

இந்த மருந்தை அம்மை நோயினால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்து குளிக்க வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் சில நாட்களில் அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்பு மறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *