பணத்துக்கு பஞ்சமே வரகூடாதா? அப்பே இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்க
பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் வாஸ்து சாஸ்திரம் என்று வந்து விட்டால், அதற்குரிய வகுக்கப்பட்ட சாஸ்திரங்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வாஸ்து அடிப்பமையில் சில தாவரங்களுக்கு மிகவும் முக்கிய இடமுண்டு. இந்த விஷயங்களின் அடிப்படையில் நம் பெரியோர்களும், சாஸ்திரங்களும் குறிபிடப்பட்டுள்ள.
அனைவருக்குமே பணம் தேவை. பணத்தை போதும் என்று சொல்லும் யாரும் உலகில் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம் தரும் செடி வகைகளை பல காணப்படுகின்றது. வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும் ஜேட் செடி தொடர்வில் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
இந்த தாவரம் பணத்தை ஈர்க்குமா?
சில தாவரங்கள் மனிதர்களுக்கு உணவாக பயன்படுகின்றது. சிலவகை தாவரங்களில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் நோய்களை குணப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
குறிப்பிட்ட சில தாவரங்கள் பணத்தை ஈர்க்கும் தன்மையுடையது. இதனடிப்படையில் ஜேட் செடி (jade plant )பணத்தை ஈர்க்கும் தாவரங்களின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது.
பொதுவாக பலரும் இந்த செடியை ஒரு அலங்கார தாவரமாக நினைத்தே பயன்படுத்துகின்றார்கள்.
வீட்டில் அல்லது அலுவலக மேசையில் இதை காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்த தாவரத்துக்கு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி அதிகமாக காணப்படுகின்றது.
வீட்டின் பொருளாதார நிலை மேம்பட விரும்பினால், இந்த செடியை வீட்டின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் வைத்தால் அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும்.
அதுபோல், இந்த செடியை அலுவலகத்தில் தென்மேற்கு திசையில் வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மேலும் அலுவலகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
குறிப்பாக இதை அறையில் தெற்கில் மாத்திரம் வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் ஜேட் செடியை இது மிகவும் மங்களகரமானதாக அமையும்.
இதனால் பணப்பிரச்சினைக்கு விரைவில் முடிவு வரும். நேர்மறை ஆற்றல் அதிகரித்து மனதில் தெளிவு உண்டாகும்.