அலட்சியப்படுத்தக்கூடாத மரண அறிகுறிகள்! இது சிவபுராணத்தின் உமா சம்ஹிதை இறப்பு ரகசியம்…

Om Nama Shivaya : சர்வம் சிவமயம் என்று சொல்லும் இந்து மதத்தில் சிவனே அனைத்துமானவன். அவன் அழகற்றவன், அவனே மிகவும் அழகானவன்; அவன் சிறந்தவன், அவனே மோசமானவன்; அவன் மிகவும் ஒழுக்கமானவன், அவனே ஒழுக்கமற்றத் தன்மையையும் உண்டாக்குபவர். கடவுள்கள், பேய்கள் என அனைத்து உயிரினங்களும் சிவபெருமானை வழிபடும்.

உயிரினங்களின் தோற்றத்தையும் அவற்றின் இருப்பின் முடிவையும் முடிவு செய்யும் பெருமானான சிவபெருமான், மரணம் எப்படி வரும் என்பதற்கான அறிகுறிகளையும் சொல்கிறார். சிவபுராணத்தில், மரணம் வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் பற்றி பேசப்பட்டிருக்கிறது.

மரணம் என்பதே உலகின் ஆகச்சிறந்த புதிராக இருக்கிறது. மரணம் என்பதை யாரும் தவிர்க்கவோ தள்ளிப்போடவோ முடியாது என்பது உண்மை. ஆனால், மரணம் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள் என்ன என்பது பொதுவானதாக இருக்கலாம். இந்த ரகசியத்தை அறிந்துக் கொள்ள யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?

சிவபுரணத்தில் கூறப்பட்ட மரண அறிகுறிகள்
வழக்கத்திற்கு மாறாக உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாறுவதும், உடலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதும் சில காலத்தில் மரணம் வரும் என்பதற்கான அறிகுறியாக சிவபுரணம் குறிப்பிடுகிறது.
வாய், காது, கண்கள் நாக்கு என உடல் உறுப்புகள் உணர்திறனை உணர்ந்தால் மரணம் நெருங்குகிறது என்று பொருள்.

சூரியன், சந்திரன், நெருப்பு, வாயு ஆகியவை ஏற்படுத்தும் மாற்றங்களை உணராமல் இருப்பது மரணம் நெருங்கியதற்கான அறிகுறியாகும். அதேபோல, கண் பார்வை மங்கி, இருட்டாகத் தோன்றினால், ஆறு மாதங்களுக்குள் மரணம் வரும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து சில நாட்களாக இடது கை நடுங்கிக் கொண்டு இருந்தால். உடலின் பல்வேறு உறுப்புகள் பலவீனமடைவது, ஒரு மாதத்திற்குள் மரணம் நிகழும் என்பதைக் குறிக்கிறது.

வேறு எந்த தெய்வங்களையும் கிரகங்களையும் வழிபடுவதை விட, நவகிரகங்களையும் அடக்கி ஆளும் சிவனின் காலடியை பற்றினால், கவலைகள் பறந்தோடும்.

இறப்பை வெல்லும் தீர்வு
சிவபுராணத்தில், மரணத்தை வெல்ல தீர்வு உண்டா? என்ற கேள்விக்கு ​​சிவபெருமான் சொல்லும் பதில்… மரணத்தை வெல்வது என்பது உலகில் எந்த உயிரினத்திற்கும் இயலாத விஷயம், ஆனால், தியானம் மற்றும் யோகத்தை தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால், மரணத்தை வெற்றி கொள்ளலாம்.

மரணத்தை வெல்வது என்பது, மரண பயம் இல்லாமல், மரணத்தை இயல்பாக எதிர்கொள்ள மனமும் உடலும் தயாராவது என்று பொருள் கொள்ள வேண்டும்.

யோகத்தை தொடர்ந்து பயிற்சி செய்பவர் மட்டுமே மரணம் என்ற வார்த்தையின் அர்த்தத்தையும், அதன் மீது தெய்வத்தின் செல்வாக்கையும் புரிந்து கொள்ள முடியும் என்று சிவபுராணம் விளக்கம் அளிக்கிறது.

ஆன்ம சுத்திகரிப்புக்கு தியானம் அடிப்படையாகிறது. ஒரு மனிதன் இறக்கும்போது, அவரது ஆன்மா என்னும் ‘சுயம்’, மனிதனின் உள் உலகம், அங்கு உடலின் இருப்பு உணர்வுகள் மறைந்துவிடும்.

மகா சிவராத்திரி நாளன்று விரதம் இருந்து மகாதேவனை, காலகண்டனை வணங்கினால், அந்த சிவ வழிபாடு மரண பயம் அறுக்கும். விரதம் இருப்பவர்கள், சிவனையே நினைத்து உருகி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்வது நல்லது.

மரண பயத்தை எதிர்கொள்வது எப்படி?

மரண பயம் போக்கும் பல விஷயங்களில் முதன்மையானது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரம் தான். மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம், கால பைரவர் மந்திரம் என பல்வேறு வழிபாடுகள் இருந்தாலும் சிவனை போற்றி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சிவ மந்திரமான சிவாயநமஹ என்பதை உச்சரித்தால், காலனையும் வெல்லலாம், காலத்தையும் வெல்லலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *