சூரியனை போல் தலைவனாக மாறப்போகும் ராசிகள்
சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார்.
சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள். சூரிய பகவானின் அருளை பெற போகின்றனர். அதன் விளைவாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் எந்த ராசிக்கு கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
மிதுன ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டு வேலை முயற்சி நல்ல பலன்களை பெற்று தரும். திட்டமிட்டபடி அனைத்து செயல்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
சூரிய பகவான் உங்கள் ராசிகள் நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். விதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு ராசி
சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் முதலாம் வீட்டில் பயணம் செய்து வருகிறார். உங்களது தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.