வெறும் 7 நாட்களில் எடையை குறைக்க எளிய முறை – தொடர்ந்து செய்தாலே போதும்
பொதுவாகவே அனைவரும் தங்களது உடலை சீராக பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் உடல் எடை அதிகரிக்க கூடாது என்றும் பல முயற்சிகளை செய்வதுண்டு.
ஆனால் என்ன தான் செய்தாலும் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் தனி கவனத்தை கட்டாயம் செலுத்த வேண்டும்.
உணவு பழக்கத்தை மாற்றவில்லை என்றால் எடையை குறைப்பது என்பது கடினமான செயலாகும். அந்தவகையில் உடல் எடையை வெறும் 7 நாட்களில் குறைப்பதற்கு என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கொழுப்பு நிறைந்த துரித உணவுகளை கட்டாயம் 2 வாரத்திற்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்கவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்கவும்.
எடை குறைக்க தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாதம், சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், தயிர் போன்ற உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.