Singer Chitra: ராமர் மந்திரம், விளக்குகள் ஏற்ற சொன்ன பாடகி சித்ராவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு
சின்ன குயில் என்று அழைக்கப்படும் சித்ரா தனது சமூக வலைத்தளத்தில் விடியோ ஒன்றை வெலியிட்டுள்ளார். அதில் அவர், ” ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறும் நாளில் பகல் 12. 30 மணிக்கு ஸ்ரீ ராமா, ஜெயராமா, ஜெய் ஜெய் ராமா என மந்திரத்தை கூற வேண்டும்.
வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலை பொழுதில் ஏற்ற வேண்டும். இறைவன் ஆசியானது அனைவரின் மீது பொழிய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சித்ராவின் பேச்சுக்கும், அவரது இந்த விடியோவுக்கும் கேரளாவில் பல்வேறு கண்டன குரல்கள் எழும்பின. இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது.
அதேசமயம் சித்ராவின் பேச்சுக்கு சில ஆதரவு குரல்களும் எழும்பியுள்ளன. யாராக இருந்தாலும் அவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என தெரிவித்தனர்.
இதற்கிடையே மற்றொரு பிரபல பாடகரான வேணுகோபால், சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “சித்ராவின் பேச்சில் வேற்றுமை தோன்றினால் அவரை மக்கள் மன்னிக்க வேண்டும். விமர்சனங்கள் அவரை காயப்படுத்த கூடும்” என்று தெரிவித்தார்.
தற்போது சித்ரா பேசியிருக்கும் அந்த விடியோ அவரது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து பாடகி சித்ரா மீதான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் பாடகி சித்ராவின் கருத்து ஒற்றுமையாக குறிப்பதாக இருப்பதாகவும், அவருக்கு எதிரான சைபர் தாக்குதல் தடுக்க வேண்டும் எனவும் கேரள மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி பிராண பிரதிஷ்டை நாளில் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்த மதிப்பிற்குரிய பாடகி கே.எஸ்.சித்ரா மீது இடதுசாரி குழுக்களின் இணையத் தாக்குதல்களால் திகைப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
ஒரு இந்து தன் நம்பிக்கைகளை சக மக்களுடன் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவில் கேரளாவில் பினராயி விஜயனின் ஆட்சி அமைந்துள்ளன.
இந்தச் செயலில் காங்கிரஸ் மௌனம் காப்பது வெட்கக்கேடானது.கேரள பாஜக, பாடகி கே.எஸ்.சித்ராவுக்கு முழு ஆதரவை தருகிறோம் நிற்கிறோம்” என்று கேரள மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.