எஸ்ஐபி vs சுகன்யா சம்ரிதி செல்வ மகள் திட்டம்! எந்த முதலீடு அதிக வருவாய் தரும்? உதாரணத்துடன் விளக்கம்

சென்னை: அண்மை காலமாக முதலீடு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எந்த முதலீடை தேர்வு செய்வது என்ற குழப்பமும் நிலவுகிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய குழப்பம் சுகன்யா சம்ரிதி யோஜனா முதலீடு லாபமானதா அல்லது எஸ்ஐபி முதலீடு லாபமானதா என்பது தான்.

இந்த கட்டுரை மூலம் அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்போம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா: பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சிறு சேமிப்புத் திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்). இதில் உங்கள் முதலீட்டின் முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும் முதலீடு செய்தால் போதும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கிறது.

எஸ்ஐபி: எஸ்ஐபி என்பது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஆகும். அதாவது திட்டமிட்டு சேமிக்கும் முதலீடு திட்டமாகும். இந்த திட்டம் மியூச்சுவல் பண்டுகள் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகும். எஸ்ஐபியில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப ஒரு தொகையை மாதாந்திர முறையில் முதலீடு செய்யலாம்.

எஸ்ஐபிP vs சுகன்யா சம்ரிதி யோஜனா: உதாரணத்திற்கு அருண் என்பவர் தனது குழந்தைக்காக மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளார். சுகன்யா சம்ரிதி யோஜனாவில் அவர் 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை கணக்கிடலாம்.

சுகன்யா சம்ரிதி முதலீடு: சுகன்யா சம்ரிதி யோஜனாவில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட்மெண்ட் பிளானில் 12% ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என வைத்துக் கொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனாவில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், உங்களின் மொத்த முதலீடு 15 ஆண்டுகளுக்கு 9 லட்சம் ரூபாய் ஆகும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் முதலீடு செய்ய தேவையில்லை. சுகன்யா சம்ரிதி யோஜனாவில் உங்களின் முதலீடு 21 ஆண்டுகளுக்கு பின் முதிர்வடைகிறது, ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கிறது என்றால்

உங்களின் முதலீடு = 9,00,000

வட்டி = 18,71,031

முதிர்வு தொகை =27,71,031

எஸ்ஐபி முதலீடு: அருண் தனது மகளுக்காக 15 ஆண்டுகளுக்கு எஸ்ஐபிஇல் மாதம் 5 ஆயிரம் என மொத்தம் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார். பொதுவாக எஸ்ஐபி ரிட்டர்ன்ஸ் 12 %ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே 15 ஆண்டுகளில் உங்களுக்கு மொத்தமாக 25.22 லட்சம் கிடைக்கும்.

முதலீடு = 9,00,000

கேபிடல் கெய்ன்ஸ் = 16,22,880

முதிர்வு தொகை = 25,22,880

எஸ்ஐபி முதலீட்டை நீண்ட காலம் தொடரும் போது உங்களுக்கு கிடைக்கும் ரிட்டர்ன்ஸ் அதிகமாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீண்ட கால முதலீட்டுக்கு சுகன்யா சம்ரிதியை விட எஸ்ஐபியில் அதிக லாபம் கிடைக்கிறது. 15 வருடம் என்றால் செல்வ மகள் செல்வம் தரும் திட்டமாக மாறும். சுகன்யா சம்ரிதி என்பது அரசின் திட்டம் என்பதால் பாதுகாப்பானது. எஸ் ஐபி என்பது சந்தையுடன் இணைக்கப்பட்டது என்பதால் அதற்கான ரிஸ்க்குகளும் இருக்கின்றன என்பதை நினைவில் கொண்டு முதலீடு செய்யவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *