Siragadikka Aasai:ரோகினியின் மாமா வருவதால் ஓவர் அலப்பறை செய்யும் விஜயா- விழி பிதுங்கும் குடும்பத்தினர்- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மீனாவும்-முத்துவும் கட்டிலின் மீது குடையை விறித்து வைத்து இரவில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர். மறுநாள் காலையில் ஊரில் பக்கத்து வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் குடையுடன் பாட்டி வீட்டுக்கு வருகின்றனர்.

அவர்கள் முத்து – மீனாவிடம் ‘எங்கள் வீட்லயும் தான் குடை இருக்கு கட்டில் இருக்கு என் புருஷனுக்கு இப்படி ஒரு விஷயம் தோணவே இல்லையே’ என சொல்கின்றனர். மேலும் அதில் ஒரு பெண் ‘எங்க புருஷன்களுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது’ என சொல்கிறார். மேலும் இன்னைக்கும் வெளிச்சம் வரும் இல்ல அப்போ பார்த்துக்குறோம் என்று சொல்லி விட்டு அங்கு இருந்து செல்கின்றனர்.

விஜயா மீனாவிடம், ‘வடை, முருக்கெல்லாம் உன்கிட்ட செய்ய சொன்னனே’ என கேட்கிறார். அதற்கு பாட்டி மீனாவிடம் வேலை சொல்வது குறித்து கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா, ‘இல்ல அத்தே அப்போ நான் அவர்கூட பேசிக்கிட்டு இருப்பேன் அப்போ போய் நான் இதெல்லாம் செய்ய முடியுமா?’ என கேட்கிறார். விஜயா, முத்துவை பார்த்து இன்னைக்கு ஒரு நாளாவது இவன் வாய்க்கு பூட்டுப்போட சொல்லு என சொல்கிறார். ஆர்டர் கொடுத்து இருக்கு, அவங்களுக்கும் சேர்த்து தான் பூட்டு வரும்னு சொல்லு மீனா என்கிறார்.

விஜயா, மீனா போட்ட கோலத்தை பார்த்து என்ன இப்படி கோலம் போட்டு இருக்க வெல்கம்னு எழுத வேண்டியது தானே என கேட்கிறார். விஜயா வீட்டினுள் இருக்கும் கட்டிலை அங்கிருந்து எடுக்கிறார். பாட்டி என்ன பன்ற என கேட்கிறார். ‘நம்ம இப்டி இருந்து பழகிட்டோம் அவரு மலேசியாவுல இருந்து வராரு, அங்க தூசியே இருக்காதாம்’ என சொல்கிறார். அதற்கு முத்து, ‘அம்மா அவரு ஆஸ்திரேலியாவுல இருந்து வராருனு நெனச்சிக்கிட்டு இருக்காங்க. அவரு மலேசியாவுல இருந்து தான் வராரு’ என்கிறார்.

பாட்டி ஸ்ருதியிடம் ‘மீனாவை பாரு 6 மணிக்கே எந்திருச்சி எல்லா வேலையும் செய்யுறா நீயும் இதையெல்லாம் பழகிக்கலாம் இல்ல’ என கேட்கிறார். அதற்கு விஜயா, ‘அச்சச்சோ அத்த அவளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல’ என்கிறார். ‘பழகலனா பழகிக்கனும்’ என பாட்டி சொல்கிறார். விஜயா திடீரென அச்சசோ நான் மறந்துட்டேனே என்கிறார்.’ மீனா ஆரத்தி கரச்சி எடுத்து வை’ என சொல்கிறார். ‘ரோகினியோட மாமா மலேசியாவுல இருந்து வராரு இல்ல அவர ஆரத்தி எடுத்து வர வைக்க வேணாவா’ என கேட்கிறார்.

விஜயா ரோகினியிடம் ‘எல்லாத்துக்கும் பொறாம, உன் மாமா வரட்டும் அப்றம் பேசிக்கலாம் நாம’ என்கிறார். ரோகினி இவங்க வேற வீட்டையே ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவரு வருவாரா இல்லையானு தெரியல என மனதில் நினைக்கிறார். ரோகினி ப்ரெளன் மணிக்கு கால் பண்ணி எங்க இருக்கிங்க என கேட்கிறார். அவரு ‘5 மணிக்கே வந்துட்டேன்’ என சொல்கிறார். ரோகினி அப்போ ஏன் வர்ல என கேட்கிறார். ‘ஒரு பில்டப் தர வேணாவா’ என கேட்கிறார். ‘வெயிட் பண்னதெல்லாம் போதும் சீக்கிரம் வந்து தொலைங்க’ என ரோகினி சொல்கிறார். அவர் ப்ரெளன் மணி இன்னையில இருந்து உனக்கு புதிய அத்தியாயம் ஆரம்பிக்குது என சொல்லிக்கொண்டே காரை நோக்கி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *