Sivakarthikeyan: அயலான் படமே ஓடல.. இதுல இவரு அடுத்த தளபதியா?.. கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!
சிவகார்த்திகேயன் கடுமையான உழைப்பை கொட்டி நடித்துள்ள எஸ்கே 21 படத்தின் டைட்டில் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி 16ம் தேதி மாலை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் எந்தளவுக்கு மெனக்கெட்டு ஒரு ராணுவ வீரராக ரெடியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார் பாருங்க என நேற்று மாலை ராஜ்கமல் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டது.
அந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் அடுத்த தளபதி தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தான் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆனால், தங்கள் ஹீரோவின் பட்டம் யாருக்கும் சென்று விடக் கூடாது என்கிற பொறாமையுடன் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கலாய்க்கத் தொடங்கி உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் டைட்டில்: ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் எப்படி பிரச்சனை செய்து கடந்த ஆண்டு முழுவதும் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டார்களோ அதே போன்ற ஒரு நிலைமை தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என அறிவித்துள்ள நிலையில், தளபதி ரசிகர்களுக்கும் வந்திருக்கிறது என்கின்றனர்.
12 ஆண்டுகால உழைப்பு: விஜய் டிவியில் சாதாரண ஸ்டாண்ட் அப் காமெடியனாக உள்ளே நுழைந்து கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கியது மட்டுமின்றி விஜய் டிவியிலேயே தனக்கான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டு சினிமா பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து அஜித்தின் ஏகன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து பின்னர் தனுஷின் அன்பை பெற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படத்தில் காமெடியனாக நடித்து அப்படியே படிப்படியாக ஹீரோவாக மெரினா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அதிரடி காட்டி அதன் பின்னர் 12 ஆண்டுகள் கோலிவுட்டில் ஏகப்பட்ட குட்டி ரசிகர்கள் முதல் பெரியவர்கள் மனங்களை வரை வென்றுள்ள சிவகார்த்திகேயன் அடுத்து எஸ்கே 21வது படத்துக்காக வெயிட்டாக களமிறங்க காத்திருக்கிறார்.
கமல் தயாரிப்பில்: உலக நாயகன் கமல்ஹாசன் தன்னைவிட சினிமாவை அதிகம் நேசிப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ராஜ்கமல் நிறுவனத்தில் தற்போது சிவகார்த்திகேயன், சிம்பு படங்களை தயாரித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள எஸ்கே 21 படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை 17ம் தேதி கொண்டாடுகிறார்.
அடுத்த தளபதி: எஸ்கே 21 படத்துக்காக சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து தாறுமாறான உடம்புடன் இருக்கும் வீடியோவை நேற்று ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு சிவகார்த்திகேயனின் டிரான்ஸ்ஃபர்மேஷனையும் அவரது டெடிகேஷனையும் ரசிகர்களுக்கு காட்டியது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த தளபதி ரெடியாகிட்டாரு என அதிகளவில் கமெண்ட்டுகளை போட ஆரம்பித்தனர்.
அயலான் படமே ஓடல: தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் ஃபிளாப், கடந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்யல, அதே போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படமும் சொதப்பிடுச்சு இதில், அடுத்த தளபதியா? நல்லா காமெடி பண்றீங்க என விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கலாய்த்து வர இரு க்ரூப்புக்கும் இடையே சோஷியல் மீடியா சண்டை வெடித்துள்ளது. எஸ்கே 21 படம் இந்த கேலி கிண்டலுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.