அசுர வேகத்தில் உச்சத்துக்கு சென்ற சிவகார்த்திகேயன்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமா துறையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தவர் இவர். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
சிவகார்த்திகேயன் பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.
பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.
சொத்து மதிப்பு
2012ம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் நடிப்பதற்கு 10,000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவரின் தற்போதைய சம்பளம் ஒரு படத்திற்கு 50 கோடி முதல் 75 கோடி வரை அநுர வேகத்தில் உயர்ந்து விட்டது.
மேலும் தயாரிப்பாளராகவும் அசத்திவரும் இவரின் தயாரிப்பில் உருவாகிய கொட்டுக்காளி திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என வளர்ந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 250 கோடிக்கும் மேல் இருக்கும் என்று தெரியவருகின்றது.