Sivakarthikeyan: விஜய் இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்? அடுத்தடுத்த மாஸ் லைன்-அப்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து மாஸ் படங்களை வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் டாக்டர் டான் படங்களை தொடர்ந்து அவரது பிரின்ஸ் படம் சொதப்பினாலும் அடுத்ததாக உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டில் மாவீரன் என்ற வெற்றி படத்தை மீண்டும் கொடுத்தார் இதனிடையே கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி அவரது அயலான் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ள நிலையில் இந்தக் கூட்டணி படத்தின் இரண்டாவது பாகத்திற்காக மீண்டும் இணையவுள்ளது.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் தற்காலிகமாக எஸ்கே 21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 17ஆம் தேதி அவரது பிறந்த நாளை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது படத்தின் பர்ஸ்ட் லுக் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் எண்ட் கார்ட் போட உள்ளது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.