ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்த்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு புதிய பிரச்னை
இன்று (16.02.2024) முதல் எந்த திரைப்படத்திற்கும் சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்கி வருகிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு வெளிமாநில யூனிட்டுகளை பயன்படுத்துவதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையை மீறி சிலர் செயல்படுவதால் இன்று முதல் எந்த திரைப்படத்துக்கும், சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு அந்த சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கி வரும் தக்லைஃப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது இந்த குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் மூன்று நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என்று பேச்சுவார்த்தை நடத்தி அதை சுமூகமாக முடித்துக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கும் அவுட்டோர் யூனிட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.