ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படங்கள் வெளியானது
4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் வரவிருக்கும் ஸ்கோடா மாடல் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாடல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது. MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ள காரில் மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், பாதுகாப்பான கட்டுமானத்தை கொண்டிருக்கும்.
ஸ்கோடாவின் பாரம்பரிய கிரிலுடன் அமைந்துள்ள காரின் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட் செட்டப் உடன் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், உயரமான வீல் ஆர்ச் பெற்றிருக்கின்றது. 2,566 மிமீ வீல்பேஸ் கொண்டதாக அமைந்துள்ள மாடலில் 115hp பவரை வழங்குகின்ற 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 170 Nm டார்க் பெற வாய்ப்புள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கூடுதலாக 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸ் எனது பெறலாம்.
இந்த மாடலுக்கான பெயர் Kwiq, Kymaq, Kylaq, Kariq, மற்றும் Kyroq ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கும். இந்திய சந்தையில் கிடைக்கின்ற நெக்ஸான், வெனியூ, கியா செல்டோஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மாருதி சுசூகி பிரெஸ்ஸா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.