ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகமானது

400 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ள ஸ்கோடா எபிக் (Epiq BEV) எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை ஐரோப்பா சந்தையில் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது. மாசு உமிழ்வு இல்லா 6 மாடல்களை 2026க்குள் வெளியிட ஸ்கோடாவின் பட்டியிலில் ஒன்றாக எபிக்கும் விளங்க உள்ளது.

4100 மிமீ நீளம் கொண்டுள்ள எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் ஆனது BEV மாடலாக விற்பனைக்கு வரும் பொழுது 2600 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகின்ற இந்த மாடல் 38kWh மற்றும் 56kWh என இரு விதமான பேட்டரி பேக் பெற்றிருக்கலாம் என கூறப்படும் நிலையில் எவ்விதமான நுட்பவிபரங்களும் தற்பொழுது ஸ்கோடா வெளியிடவில்லை.

எபிக் இண்டிரியர்

எபிக் காரின் இண்டிரியரில் குறைவான கோடுகளுடன் எளிமையான நவீனத்துவமான டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் மத்தியில் ஃபுளோட்டிங் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருக்கும்.

5 இருக்கை கொண்ட கேபினில் மிக நேர்த்தியான நிறங்களுடன் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு சுவிட்சுகள் மற்றும் டேஸ்போர்டில் பிசிக்கல் கண்ட்ரோல் பட்டன் கொண்டுள்ளது.

ஸ்கோடா எபிக் டிசைன்

ஸ்கோடாவின் Modern Solid design வடிவ மொழியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மாடல் எல்இடி ஹெட்லைட் நேர்த்தியாக அமைந்திருப்பதுடன், கம்பரில் அகலமான ஸ்லாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் மூன்று ஸ்போக் கொண்ட அலாய் வீல், சதுர வடிவத்திலான உயரமான வீல் ஆர்ச் பெற்றுள்ளது.

பின்புறத்தில் T-வடிவ எல்இடி டெயில் விளக்குகளுடன் பின்புற பம்பரும் அகலமான ஸ்லாட்டுகளை முன்புற பம்பரை போலவே பெற்றதாக அமைந்துள்ளது.

ஐரோப்பா சந்தையில் வரவுள்ள எபிக் மாடல் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பிலை. ஆனால் இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலை ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் இணைந்து தயாரிக்க உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *