விண்ணை தொடும் விமான கட்டண உயர்வு; பஸ், ரயில் போன்று சிறப்பு விமானத்தை இயக்க வலுக்கும் கோரிக்கை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கல்வி, பணி உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்கி வசிப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

கடைசி நேரத்தில் ரயில்கள், பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் தற்போது விமானங்களை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையிலிருந்து மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிராக்கி அதிகரித்துள்ளதால், இந்த நகரங்களுக்கான விமான கட்டணங்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3,624 வசூலிக்கப்படும் நிலையில், ரூ.13,639 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரைக்கான கட்டணம் ரூ.3,367 ரூபாயிலிருந்து ரூ.17,262 ஆக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,264 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.11,369 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவைக்கான கட்டணம் ரூ.3,315 இல் இருந்து ரூ.14,689 ஆகவும் சேலத்துக்கு ரூ.2,290 இல் இருந்து ரூ.11,329 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் வேறு வழியின்றி கட்டணங்களை பொருப்படுத்தாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்கின்றனர். பலருக்கு டிக்கெட் கிடைக்காத நிலையில், சிறப்பு பேருந்து, ரயில் போல் சிறப்பு விமானங்களையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *