SL vs ZIM.. 273 ரன் 9 விக்கெட்.. பரபரப்பான போட்டி எதிர்பாரத முடிவு.. ஜிம்பாப்வேக்கு அடித்த லக்.. இலங்கை ரசிகர்கள் சோகம்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொழும்புவில் பிரம்மதேசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இலங்கை அணிக்கு குஷால் மெண்டிஸ் கேப்டனாக பதவி வகித்தார். அவிஷ்கா பெர்னாடோ, மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார். அவிஷ்கா பெர்னாண்டோ நான்கு பந்துகள் எதிர்கொண்ட நிலையில் ஐந்தாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். குசால் மெண்டிஸ் 48 பந்துகளில் 46 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய சமர விக்ரமா அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தனது பங்குக்கு ஜனாத் லியாங்கே 24 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். ஒரு புறம் இலங்கை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருக்க, மறுபுறம் அசலங்கா மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவர் 95 பந்துகளில் அஞ்சு பவுண்டரி, நாலு சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய தீக்ஷானா மற்றும் சமீரா ஆகியோர் 10 மற்றும் 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். மற்றும் ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்திருந்தது.

ஜிம்பாப்வே அணிக்கு சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது. அசலங்காவின் சிறப்பான சதத்தின் உதவியால் இலங்கை அணி 273 ரன்கள் குவிக்க வழி வகுத்தது. ஜிம்பாப்வே அணித் தரப்பில் முசார்பானி பத்து ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனுடன் 68 ரன்களை வழங்கி இரண்டு விக்கெட்டுகளை அள்ளினார். பராஸ் பத்து ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளும், சிறப்பாக பந்து வீசி நகர்வா 6.4 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதனை அடுத்து ஜிம்பாப்வே தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக காட்டினோ மற்றும் கமுன்ஹுகாமே களம் இறங்கினார்.
கமுன்ஹுகாமே தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மது சங்காவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். பிறகு ஒன் டவுனில் களமிறங்கிய கேப்டன் இர்வின் 4 பந்துகள் எதிர்கொண்ட நிலையில் அவரும் மதுசங்காவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் ஜிம்பாப்வே அணி 12 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

வெற்றி பெறும் முனைப்பில் இருந்த இலங்கை அணிக்கு இந்த ஆட்டம் எதிர்பாராத முடிவை கொடுத்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி வரும் திங்கட்கிழமை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *