தோனி கொடுத்த சிறிய அட்வைஸ்.. முற்றிலுமாக பிரகாசமாகிய ஷிவம் தூபேவின் கரியர் – விவரம் இதோ
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 5-6 ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
அதற்கு காரணம் அவர் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் என்பதை தாண்டி ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளரும் கூட அதன் காரணமாகவே அவரை ஆல்ரவுண்டராக இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. அதோடு அவரது இடத்திற்கு மாற்று யாரும் இல்லாமல் பாண்டியாவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவருக்கு போட்டியாக பார்க்கப்பட்ட ஷிவம் துபே கடந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அசத்திய வேளையில் அவருக்கு அதே ஆண்டு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் தனக்கு கிடைத்த ஆரம்ப கட்ட வாய்ப்புகளில் சற்று மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். அதே வேளையில் ஐபிஎல் தொடரிலும் சில அணிகள் மாறி மாறி விளையாடி வந்தார். அதன் பிறகு எப்போது சிஎஸ்கே அணிக்காக அவர் ஏலத்தில் வாங்கப்பட்டாரோ அதிலிருந்து அவருடைய கரியர் உச்சத்தை நோக்கியே நகர்ந்து வருகிறது என்று கூறலாம்.
ஏனெனில் சென்னை அணிக்காக அறிமுகமாகிய பின்னர் ஷிவம் துபேவை பந்துவீச வைக்காத தோனி அவரை மிடில் ஆர்டரில் ஒரு அதிரடியான பேட்ஸ்மேனாக பட்டி தீட்டியிருக்கிறார். குறிப்பாக அதிரடியாக விளையாடும் அவர் ஒரு சில பந்துகளை பிடித்து ஆட்டம் இழந்து வந்த வேளையில் அவரை எப்படி பெரிய இன்னிங்ஸ் விளையாட வைக்க வேண்டும் என்று தோனி அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அந்த வகையில் ஷார்ட் பிட்ச் பந்துகளை நீங்கள் அடிக்க வேண்டாம் உங்கள் பலத்திற்கு ஏற்றவாறு வரும் பந்துகளை அடித்தும் மற்றபடி நிதானமாக விளையாடினால் உங்களால் நிச்சயம் பெரிய ரன்களை குவிக்க முடியும் என்று தோனி பல அறிவுரைகளை அவருக்கு வழங்கியுள்ளார். அதன்படியே தன்னுடைய பலத்தை மேலும் அதிகரித்துக் கொண்ட துபே ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியும், வேகப்பந்து வீச்சாளர்களை தேவைக்கு ஏற்றார் போல் விளாசியும் தற்போது ஒரு மிகப்பெரிய ஹிட்டராகவே உருவெடுத்துள்ளார்.
இப்படி தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் மூலம் மீண்டும் ஷிவம் துபே அசத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்ற போது கூட ஷிவம் துபே தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதாலே தன்னுடைய திறன்கள் அதிகரித்ததாகவும் அவருடன் தொடர்ந்து பேசி வருவதால் என்னுடைய ஆட்டமும் முன்னேறி வருகிறது என்று நன்றி மறக்காமல் தோனியை பாராட்டி இருந்தார்.