Small Cap: 120% வருமானம் தந்த பங்கு! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
நாம் தேர்வு செய்யும் நிறுவனம், அந்த நிறுவனத்தின் தொழில் அமைப்பு, அது சார்ந்த துறை இவை எல்லாம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தந்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் குறித்து பார்க்கலாம்.டைகர் லாஜிஸ்டிக்ஸ் (Tiger Logistics) நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 120% லாபம் தந்துள்ளது.
சர்வதேச அளவில் சரக்குகளை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறது டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம். நாடு முழுவதும் வலுவான இருப்பை கொண்டுள்ளது.
வாகனம், பொறியியல், நூல்கள், ஜவுளி, மருந்து போன்றவற்றை டெலிவரி செய்யும் பணியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள நிறுவனம். கடந்த 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து வட இந்தியாவில் சிறந்த கஸ்டம் ஹவுஸ் ஏஜெண்ட் என்ற விருதுகளை பல முறை வாங்கியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு: டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தை பொறுத்த வரை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் ஆகியவை அதிக முதலீடுகளை கொண்டுள்ளன.மொத்த பங்குகளில் 3.16% அதாவது 3.33 லட்சம் பங்குகளை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் வைத்துள்ளது. அதே போல ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப் 1.43 லட்சம் பங்குகளையும், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் 1.21 லட்சம் பங்குகளையும் கொண்டுள்ளன.