சின்னத்திரை டூ வெள்ளித்திரை.. டாப் நடிகைகளில் ஒருவர்..பிரியா பவானி சங்கர் பிறந்தநாள் இன்று!

1990 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை ஆகும். டிவி செய்தி வாசிப்பாளராக இருந்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய பிரியா பவானி சங்கர் பின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வழியாக பயணித்து 2017ல் மேயாத மான் என்னும் திரைப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, ப்ளட் மனி, ஹாஸ்டல், யானை, குறுதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் என முக்கியத் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்துள்ளார் பிரியா பாவனி சங்கர்.தற்போது நடிகை பிரியா பவானி சங்கர், அருள் நிதியுடன் நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ விரைவில் வெளியாக இருக்கிறது. ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சத்யதேவின் 26 வது படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து கோபிசந்த் நடிக்கும் ‘பீமா’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
2022ல் தயாரிக்கப்பட்ட, தயாராகிக் கொண்டிருக்கும் 7 படங்களில் நடித்திருக்கிறார் பிரியா. கை நிறைய படங்களோடு தமிழ் திரையுலகில் பிஸியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், அவரது நீண்ட நாள் காதலரான ராஜ்வேலுடன் தான் பெரும்பாலும் வலம் வருவார்.
அண்மையில் காதலர் உடன் கடற்கறையோரம் புதிய வீடு வாங்கி அங்கு குடிபெயர்ந்தார். மேலும் புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை ஓபன் பண்ணி அதனை நடித்தி வருகிறார். இவ்வாறு தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.