ஒரே இன்னிங்ஸில் இத்தனை சாதனைகளா.. சச்சின், கோலி சாதனை க்ளோஸ்.. ஜெய்ஸ்வாலின் மரண மாஸ் சம்பவம்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் விளாசினர். இதையடுத்து இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 57 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக விராட் கோலி 655 ரன்கள் விளாசியதே சாதனையாக அமைந்தது.

தற்போது ஜெய்ஸ்வால் 57 ரன்கள் விளாசியதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 712 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு மேல் விளாசும் 2வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக தொடர் மற்றும் இந்தியாவில் ஆடிய தொடரில் இரு முறை 700 ரன்களுக்கும் அதிகமாக விளாசி இருக்கிறார்.

அதேபோல் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 9 போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால், இந்த சாதனையை எட்டியுள்ளார். அதேபோல் இன்னிங்ஸ்கள் எண்ணிக்கையில் வினோத் காம்ப்ளி 14 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசியிருக்கிறார். ஜெய்ஸ்வால் அவருக்கு பின் 16 இன்னிங்ஸ்களில் படைத்துள்ளார். இந்த பட்டியலில் புஜாரா 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் விளாசி 3வது இடத்தில் உள்ளார்.

அதேபோல் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 25 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரே தொடரில் முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் 26 சிக்சர்களை விளாசி இருக்கிறார். 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜெய்ஸ்வால் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *