முள்ளங்கியில் இவ்வளவு நன்மைகளா? – இது தெரியாம போச்சே.!

காய்கறி வகைகளில் ஒன்று முள்ளங்கி. நீர் சத்து மிகுந்துள்ள இந்த முள்ளங்கியின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

 

* முள்ளங்கியில் வைட்டமின் ஏ,சி,ஈ, கே, ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் செரிமானம் மேம்படும். முள்ளங்கியை சாப்பிடுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது.

* முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதுடன் சிறுநீர்ப்பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

* முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

* முள்ளங்கிக்கு சுருங்கிப்போன காற்றுக்குழாய்களை விரிவடையும் திறன் உள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னைகள் தீரும். குளிர்காலத்தில் முள்ளங்கி சாப்பிட்டால் சளி மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

* அதுமட்டுமல்லாமல், முள்ளங்கி இதயநோய்களைப் போக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு முள்ளங்கி நல்ல பலனைத் தரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *