2024 டைட்டிலுக்கு இத்தனை கோடியா..!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இத்தொடரின் முக்கிய அப்டேட்டான IPL Mini Auction நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல முக்கிய மற்றும் சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடைபெற்றன. சில எதிர்பாரத நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த ஏலத்தில் இதில் இதுவரை நடைபெற்ற எல்லா IPL ஏலத்திலும் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். இந்நிலையில் தான் இந்த IPL தொடர் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலில் IPL தொடரின் Title Sponsor பற்றி வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) தொடருக்கான IPL 2024 Title Sponsor உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை TATA நிறுவனமானது தக்க வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த உரிமைக்கு ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூபாய் 500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.