இந்தியாவில் இத்தனை லட்சம் நெக்ஸான் கார்கள் விற்பனையா? டாடா சொன்ன தகவல்!!

டாடா நெக்ஸான் கார் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த எஸ்யுவி வகை கார் சௌகரியம் மிகுந்த பயண அனுபவத்தை கொடுக்கக் கூடியது ஆகும். ஒரு குடும்பத்தினர் முழு திருப்தியுடன் பயணம் செய்யும் வகையில் கார் உள்ளே இட வசதிகளையும், நல்ல தோற்றத்தையும் இந்த கார் கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சி ஒன்றில் இந்த எக்ஸாம் கார் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் இந்த காரின் facelift முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டது மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டு வரையிலும் காரின் தோற்றத்தில் வெவ்வேறு வகையான மாற்றங்களும், தொழில்நுட்ப மேம்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் ஒரு புதிய தலைமுறை கார் போல இது அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக ரியல் கிளெச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜின் போன்ற அம்சங்கள் இடம் பெற தொடங்கின.

தற்போதைய விலை : டாடா நெக்ஸான் காரின் தற்போதைய விலை ரூ.8.1 லட்சம் ஆகும். எலக்ட்ரிக் காரின் விலை ரூ.14.74 லட்சம் ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட 7 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி ப்ரீஸா, மஹிந்திரா XUV300, நிஸான் மெக்னைட், மஹிந்திரா XUV400 போன்ற கார்களுக்கு இணையாக மார்க்கெட்டில் நெக்ஸான் விற்பனையாகி வருகிறது.

டாடா நெக்ஸான் வேரியண்ட்கள் : புதிய டாடா நெக்ஸானின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.1 லட்சத்தில் தொடங்கி 15.5 லட்சம் வரை செல்கிறது. டாடாவின் புதிய நெக்ஸான் கார் Smart, Smart+, Smart+ S, Pure, Pure S, Creative, Creative+, Creative+ S, Fearless, Fearless S மற்றும் Fearless+ S உள்ளிட்ட வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. இதில் ‘+’ என்பது கூடுதல் அம்சங்களை குறிக்கிறது, அதேசமயம் S என்பது அந்த வேரியன்ட்டில் சன்ரூஃப் சேர்க்கப்பட்டிருப்பதை குறிக்கிறது.

முன்னணியில் இந்தியா : இந்தியாவின் வாகன விற்பனை சந்தை மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடி ஆகும். கடந்த ஆண்டில் 4 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறியது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *