பலாப்பழத்தில் இவ்வளவு தீமைகளா? யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது?
முக்கனிகளில் ஒன்று பலா. ஏப்ரல், மே, ஜூன் உள்ளிட்ட வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் மட்டுமே பயிராகும் இந்த பலாப்பழத்தில் வைட்டமின், நார்ச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் காணப்படும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவைக்கிறது.
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இந்த பலாப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் சரி ஆகும். அதிலும் குறிப்பாக, புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை அழிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
உடலை தாக்கும் பல்வேறு வகையான நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு. பலாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நோய்கள் குறித்துக் காண்போம்.
* வயிற்று வலி, வயிற்றுப்புண் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
* பலாபழம் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தி சூடு கட்டி, சிறுநீர் கடுப்பு, நீர் பாதையில் எரிச்சல், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.
* அப்பண்டிசைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது.