நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? – வாங்க பார்க்கலாம்.!
பழம் மற்றும் காய்கறி வகைகளில் ஒன்றான நெல்லிக்காயில் மருத்துவ குணநலன்கள் அதிகம் காணப்படுவதால், அதனை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த நெல்லிக்காயை கடித்து சாப்பிட முடியாதவர்கள் ஜூஸாக குடித்து வரலாம். அப்படி குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பது குறித்து பார்க்கலாம்?
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலில் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாவதால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
இந்த ஜுசை குடிப்பதன் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து விடுபடலாம். மஞ்சள் காமாலை நோய் பாதிப்படைந்தவர்களுக்கு கல்லீரல் வீக்கமாக இருக்கும். இவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பது மிகப்பெரும் பிரச்சனையாக பலருக்கும் இருந்து வருகிறது. அப்படி இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடை வேகமாக குறைய வழிவகுக்கும்.
சளி, இருமல், காய்ச்சல் என்று அடிக்கடி நோய் பாதிப்புக்குள்ளாகும் போது, நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் உடலில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகப்படுத்தி நோய் கிருமிகளை தடுக்கிறது.