மாசி மாதத்துல இத்தனை விசேஷமா… இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ் மாதங்களில் மாசி மாதம் துவங்கிடுச்சு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதன் காரணம் தை மாதம் மட்டுமே கிடையாது. அதன் பிறகு சித்திரை வரையில் அடுத்தடுத்து நல்ல கால சூழல் அமைகிறது. மாசி மாதத்தில் இந்த குறிப்பிட்ட நட்சத்திர நாட்களை மிஸ் பண்ணாதீங்க.

மகத்துவங்கள் நெறஞ்ச மாசம் மாசி மாதம். மாசி மாதம் நம்முடைய வழிபாடுகளால் மனம் வலிமை பெறும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. மாசி மாதம் மாங்கல்ய மாதம். மாசி மாதத்தில் தான் சக்தி சிவத்தோடு இணைந்து முழுமை பெறுகிறார்.

இதனால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிச்சரடை மாற்றிக் கட்டிக் கொள்வர். மாசிக் கயிறு பாசி படியாது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் மொழி.

இந்த மாதத்தில் தான் அனைத்து புண்ணிய நதி, தீர்த்தங்கள், கடற்கரையிலும் தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் சைவ, வைணவ திருத்தலங்களில் மாசி மாதத்தில் கடலாட்டு விழா உற்சவங்கள் கோலாகலமாக நடைபெறும்.

மாசி மாதத்தில் பார்வதி தேவி தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கின்றன நமது புராணங்கள். சிவபெருமானின் திருவிளையாடல்கள் பல மாசி மாதத்தில் தான் நிகழ்த்தப்பட்டது. மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம். மாசி மாத பூச நட்சத்திர தினத்தில் தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். மகத்துவம் நிறைந்த மாசி மாத ஏகாதசியில் உயர்படிப்பிற்கான விண்ணப்பங்களை எழுதலாம். மாசி மகம் நட்சத்திர நாளில் அவற்றைத் தொடங்கினால் அந்த துறையில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *