உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு… இரண்டையும் காலி செய்யும் சில அற்புத இலைகள்

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, உயர் ரத்த சர்க்கரை என்னும் நீரழிவு நோயும், உயர் ரத்த அழுத்தமும், பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினையாக உள்ளது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், சரியான வகையில் உடல் பயன்படுத்த முடியாமல் போன நிலை அல்லது இன்சுலின் உற்பத்தி செய்ய இயலாத நிலை நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது, இரத்தக் குழாய்களிலும் இதயத்திலும் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது. ஹைப்பர் டென்ஷன் என்னும் உயர் ரத்த அழுத்தம் இதய தமனிகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் பார அடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில், நீரிழிவு இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட இலைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

துளசி இலை (Tulsi Leaves for Diabetes & High BP Control)

துளசி ஆயுர்வேதத்தில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், நீரழிவு, ரத்த அழுத்தம் இரண்டும் கட்டுக்குள் இருக்கும். துளசி இலைகள் கொழுப்பை எரிக்கும் திறனை கொண்டது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட துளசி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தையும் (Health Tips) கணிசமாக குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலை (Curry Leaves for Diabetes & High BP Control)

கறிவேப்பிலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கருவேப்பிலை இன்சுலின் உற்பத்தியை தூண்டும் திறன் கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவேப்பிலை, உயர் ரத்த அழுத்தத்தை கட்டும் வைக்கவும் பெரிதும் உதவும். இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

வேப்பிலை (Neem Leaves for Diabetes & High BP Control)

மிகுந்த வேப்பிலை நீரழிவு நோயை நிர்மூலமாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இது ரத்த அழுத்தத்தையும் பெருமளவு கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் வேப்பிலையை சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு குறைவதோடு, நீரழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும். வேப்பிலைகளில் உள்ள ஆன்ட்டிஹிஸ்டமைன் திறன், ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

நீரிழிவு – உயர் ரத்த அழுத்தம்: சில அறிகுறிகள்

உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் சுமார் 20 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதே போன்று நீரிழிவு நோயாலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தம் பொதுவாக அறிகுறிகள் அற்றது என்றாலு, மிகவும் அதிக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதிக தலைவலி, தலைச்சுற்றல், மூச்சுவிடுவதில் சிரமம், குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி, மூக்கில் ரத்தம், அசாதாரண இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகள் (High BP Symptoms) இருக்கும். அதே போன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சோர்வு, பலவீனம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், போன்ற அறிகுறிகள் (Blood Sugar Symptoms) இருக்கும்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *