விமானத்தில் சிலர் வேண்டுமென்றே கடைசி நேரத்தில்தான் ஏறுவார்கள்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்குதா?

விமானங்களில் பயணம் செய்யும்போது சில பயணிகள் கடைசி அழைப்பு வரும்போது தான் விமானத்திற்குள் போர்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். இப்படியாக அவர்கள் கடைசி நேர அழைப்பு வரும் வரை விமானத்திற்குள் ஏன் ஏற மறுக்கிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் போர்டிங் கால் என்றால் என்ன என தெரிந்திருக்கும். அதாவது விமான நிலையத்திற்குள் நுழைந்து போர்டிங் பாஸ் எடுத்து அனைவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு செல்ல வேண்டும் பாதுகாப்பு பரிசோதனை முடிந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட கேட்டிற்கு சென்று அங்கு அவர்கள் பயணிக்கும் விமானத்தில் போர்டு செய்ய வேண்டும்

இப்படியான நேரத்தில் போர்டிங் பாஸ் எடுத்த சிலர் விமானம் கிளம்பும் கடைசி நேரம் வரை விமானத்தில் ஏறாமல் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அவர்களுக்காக அழைப்பு விடுக்கப்படும். அதன் பெயர் தான் போர்டிங் கால். அப்படியாக அழைப்பு விடுக்கப்படும் போது கூட அவர்கள் ஏறாமல் கடைசி அழைப்பு என்ற அறிவிப்பு வரும்போது தான் அவர்கள் விமானத்தில் ஏறுவார்கள்.

ரெகுலராக விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பலர் இப்படியான செயல்களில் ஈடுபடுவார்கள். இது ஏன் இப்படி செய்கிறார்கள் இதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இப்படியாக கடைசியாக ஏறுவதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கிறது. இதன் காரணமாக தான் அவர்கள் வேண்டுமென்றே கடைசி கால் வரும் வரை காத்திருக்கிறார்கள்.

பொதுவாக பாதுகாப்பு பரிசோதனைகளை முடித்த பின்பு நேரடியாக போர்டிங்கிற்கு சென்றால் அங்கு போரிடிங் செய்ய ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். இந்த கூட்டத்தில் வரிசையில் காத்திருந்து நீங்கள் விமானத்திற்குள் போர்டு செய்ய வேண்டும். ஆனால் கடைசி அழைப்பு வரும் வரை காத்திருந்தால் அப்பொழுது நீங்கள் உள்ளே நுழையும் போது நீங்கள் லைனில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நேராக சென்று போர்டிங் செய்து விடலாம்.

கைப்பைகளுக்கான அனுமதி: விமானங்களில் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட எடை கொண்ட கைப்பைகளை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளது. சில நேரங்களில் குறிப்பிட்ட எடையை விட சற்று கூடுதலாக எடை உள்ள கைப்பை என்றால் விமான ஊழியர்கள் அந்த பையை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கடைசி நேரத்தில் போன்று செய்யும்போது பெரும்பாலும் இந்த விஷயங்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை அவர்கள் போர்டு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சிறப்பான சீட்டு கிடைக்கும்: விமானங்களில் ஏறும் போது பல பயணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீட்டை விமான பணி பெண்களிடம் சொல்லி வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வார்கள். இப்படியான வேலை எல்லாம் விமானத்தில் போர்டிங்கில் நடந்து கொண்டிருக்கும்போதே நடக்கும் இந்த நேரத்தில் போர்டிங் உள்ளே சென்றால் நம் சீட்டு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. கடைசி நேரத்தில் செல்லும்போது நிச்சயம் சிறப்பான சீட்டுகள் கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இப்படியாக கடைசி கால் வரை காத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் சில விஷயங்களை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமானது விமானம் கிளம்புவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடத்திற்கு முன்பாக நாம் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டிருக்க வேண்டும். அதன் பின்பு நாம் கேட் அருகே சென்று அங்கு தான் காத்திருக்க வேண்டும். லேட்டாக செல்லலாம், கடைசி கால் வரை காத்திருக்கலாம் என மற்ற பகுதிக்கு சென்று விடக்கூடாது.

இப்படியாக சென்று விட்டால் கடைசி கால் கொடுத்தும் ஆட்கள் யாரும் வரவில்லை எனக் கூறி விமானத்தின் கேட்டு அடைக்கப்பட்டு விடக்கூடும். இதனால் நீங்கள் பயணத்தை விட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். மேலும் நீங்கள் சரியான கேட்டில் தான் இருக்கிறீர்களா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கடைசி கால் வரும்போது சரியான கேட்டிற்குள்ளே செல்ல முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *