வருமான வரி விலக்கு பெற சில சிம்பிள் டிப்ஸ்… பணத்தை சேமிப்பதற்கு வழிமுறைகள் இதோ..
இந்தியாவின் குடிமக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி செலுத்தி வருகின்றனர். அது தனிநபர் வருமானமாக இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்தின் வருமானமாக இருந்தாலும் சரி, அரசு விதிகளுக்கு உட்பட்டு வரிகள் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு தங்களது வரிகளை சேமித்து, ஒட்டுமொத்த வரியை குறைப்பதற்கான பல்வேறு விதமான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. வருமான வரி விதியின் கீழ் வரியை குறைப்பதற்கு பல்வேறு சட்ட ரீதியான முறைகள் உள்ளன. அந்த வகையில் வரி செலுத்துவோர் கருத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
பிரிவு 80C, 80CCC, மற்றும் 80CCD இன் கீழ் வரும் டிடக்க்ஷன்கள்: குறிப்பிட்ட சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க கூடிய வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படுகிறது
மருத்துவ செலவுகள் (பிரிவு 80D): வாழ்க்கை துணை, குழந்தைகள் மற்றும் சீனியர் சிட்டிசன் பெற்றோர்கள் ஆகியோருக்கு காப்பீடு வழங்கக்கூடிய மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியில் 50,000 ரூபாய் வரையிலான கிளைம்கள் மாத வருமானம் பெறக்கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
வீட்டுக் கடன் (பிரிவு 24): வீட்டுக் கடன் பெற்றிருக்கக் கூடிய வரி செலுத்துவோர் தங்கள் செலுத்தும் வரிப் பணத்தில் டிடக்ஷன்களை கிளைம் செய்யலாம். இதற்கான அதிகப்பட்ச வரம்பு 2 லட்சம் மற்றும் வாடகைக்கு பெறப்பட்ட சொத்துகளுக்கு அதிகப்பட்ச வரம்பு கிடையாது.