சோனி நிறுவனத்தின் புதிய Inzone Buds… இதன் விலை எவ்வளவு தெரியுமா?

சிறந்த சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் ஆடியோ தயாரிப்புகளுக்காக புகழ்பெற்ற நிறுவனமாக இருக்கும் சோனி, சமீபத்தில் இந்தியாவில் ஒரு சிறந்த இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேமிங்கின் போது யூஸர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க Sony Inzone Buds என்ற TWS (ட்ரூ வயர்லஸ் ஸ்ட்ரீயோ) இயர்பட்ஸை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேமிங் ஆர்வலர்களுக்கு சோனியின் இந்த Inzone Buds மிகவும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. ப்ரீமியம் கேமிங் TWS இயர்பட்ஸ்களில் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் Inzone Buds பல சுவாரஸ்ய அம்சங்களை கொண்டுள்ளது.

இன்-இயர் டிசைனில் அறிமுகப்படுத்தப்படுள்ள இது சுற்றுப்புறத்தில் கேட்கும் இரைச்சலை குறைக்க ஆக்ட்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) அம்சத்தை கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 12 மணிநேரம் வரை ப்ளேபேக் டைமிங்கை இது வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.

விலை எவ்வளவு?

சோனி நிறுவனத்தின் புதிய Inzone Buds-ன் விலை இந்தியாவில் ரூ.17,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடியோ தயாரிப்பு பிளாக் மற்றும் ஒயிட் காலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி இன்சோன் எச்5 வயர்லெஸ் கேமிங் ஹெட்செட்டுடன் கடந்த ஆண்டு நவம்பரில் அவை ஆரம்பத்தில் உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்பட்டன. முன்னதாக சோனி இன்சோன் எச்5 வயர்லெஸ் கேமிங் ஹெட்செட்டுடன், கடந்த ஆண்டு நவம்பரில் இது உலக சந்தைகளில் வெளியிடப்பட்டது.

தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் இந்த இயர்பட்ஸ் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் சோனி ரீடெயில் ஸ்டோர்ஸ், ShopatSC போர்டல், முக்கிய எலெக்ட்ரானிக் ஸ்டோர்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற இ-காமர்ஸ் வெப்சைட்ஸ்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

Sony Inzone ஸ்பெசிஃபிகேஷன்கள்

சோனியின் இந்த புதிய இயர்போன்கள் ambient சவுண்ட் மோட் மற்றும் சோனியின் டைனமிக் டிரைவர் எக்ஸ்-உடன் வருகின்றன. இது 8.4 மிமீ டிரைவர்ஸ்களை கொண்டுள்ளது மற்றும் சிறந்த கேமிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க சோனியின் இன்சோன் பட்ஸ் 30ms-க்கும் குறைவான லேன்டன்ஸியை (latency) கொண்டிருக்கிறது. சமீபத்திய இந்த இயர்போன்களில் AI அசிஸ்டெட் நாய்ஸ் ரிடெக்ஷன் கொண்ட மைக்ரோஃபோனை சோனி கொடுத்துள்ளது. இவை மெய்நிகராக்கப்பட்ட சரவுண்ட் சவுண்டிற்கான சோனியின் 360 Spatial சவுண்ட் ஃபார்மெட்டை சப்போர்ட் செய்கிறது.

இந்த புதிய தயாரிப்பு சுமார் 10 மீட்டர் சுற்றளவில் அருகில் இருக்கும் டிவைஸ்களுடன் இணைக்க ப்ளூடூத் 5.3 வெர்ஷனை கொண்டுள்ளது மற்றும் LC3 ப்ளூடூத் கோடெக்கிற்கான சப்போர்ட்டை வழங்குகிறது. வியர்வை மற்றும் நீருக்கு எதிரான ஸ்ப்ளாஷ் ப்ரூஃபில் IPX4 ரேட்டிங்கை இது கொண்டிருக்கிறது. சோனி ஹெட்ஃபோன்ஸ் கனெக்ட் ஆப் மூலம் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் iOS டிவைஸ்களுடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

அதே போல Sony Inzone இயர்பட்ஸ்களானது வரும் கால்ஸ்களுக்கு பதிலளிக்க அல்லது நிராகரிக்க, சவுண்ட் வால்யூமை கட்டுப்படுத்த அல்லது ட்ராக்ஸ்களை ஸ்கிப் செய்ய டச்-எனேபிள்ட் கன்ட்ரோல்ஸ்களையும் கொண்டுள்ளன.

இந்த தயாரிப்பு USB Type-C டாங்கிள் கனெக்ஷனுடன் வருகின்றன மற்றும் 2.4 GHz வயர்லெஸ் கனெக்ஷனை சப்போர்ட் செய்கின்றன. மேலும் இவை L1 சிப் மூலம் இயங்கும் ப்ளூடூத் எல்இ ஆடியோவை பயன்படுத்துகின்றன. இதனை சார்ஜ் செய்ய மொத்தம் 2 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் ANC-ஐ ஆஃப் செய்யப்படிருக்கும் நிலையில் சுமார் 12 மணிநேரம் டாக் டைமிங்கை வழங்கும் என்கிறது நிறுவனம்.

இந்த இயர்போன்கள் சுமார் 13 கிராம் எடை கொண்டவை. LE ஆடியோவுடன் 11 மணிநேரம் வரை ப்ளேபேக் டைமிங்கை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 5 நிமிடங்கள் செய்யப்படும் சார்ஜ் இந்த இயர்போன்களுக்கு 1 மணிநேரம் வரை ப்ளேபேக் டைமிங்கை அளிக்கும் என்று சோனி கூறுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *