சாரி.. லேட் ஆயிடுச்சு.. நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்.. வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படம் அஜித்தின் 62 வது படம். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கில், அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் இணைந்தனர். அதன் பின் இடைவேளைக்கு பிறகு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில், அஜித் மற்றும் திரிஷா அஜர்பைஜான் சென்ற நிலையில் அர்ஜுன் மற்றும் ரெஜினா இணைந்தனர். மேலும் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது வில்லனாக நடித்து வரும் ஆரவ் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
விடாமுயற்சி படத்தில்அஜித்தும் த்ரிஷாவும் கணவன் மனைவியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது த்ரிஷா காணாமல் போகிறார். வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் திரிஷாவை அஜித் கண்டுபிடித்தாரா? என்பது தான் விடாமுயற்சியின் ஒன் லைன் ஸ்டோரி என்று இணையத்தில் தகவல் ஒன்று வெளியானது. அஜர்பைஜானிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுவீச்சில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்றால் நிச்சயம் விடாமுயற்சி திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியானால் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இறங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Pure gentleman AK says he is sorry for being late to #Bhavana ❤️ pic.twitter.com/51cMk1NMLZ
— Rajasekar (@sekartweets) December 25, 2023
இந்த நிலையில் அஜர்பைஜான் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அஜித்தை நேரில் சந்தித்து நடிகை பாவனா பேசியுள்ளார். இருவரும் சந்தித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘நீங்க இங்க இருப்பது தெரியும், இருந்தாலும் உங்களை சந்திக்க லேட் ஆகிவிட்டது, ரொம்ப சாரி என பாவனாவிடம் அஜித் மன்னிப்பு கேட்க, அதற்க்கு பாவனா, ‘நோ இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே.. நீங்க லேட்டா வரீங்க சொன்னதால நானும் கொஞ்சம் லேட்டா வந்தேன்..’ என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.