கோவையில் தென்னிந்திய வணிக உச்சி மாநாடு; தொழில் ஆலோசனை பெற சூப்பர் வாய்ப்பு

கோவையில் ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் 20 ஆவது வணிக உச்சி மாநாடு கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

 

இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர் டி.பி.ஷோகத் கூறியதாவது; இந்த உச்சி மாநாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் SME துறையைச் சேர்ந்த தொழில் முனைவோர்வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

தலைமை, சேவை, அமைப்பு கலாச்சாரம் மற்றும் விற்பனை ஆகிய 4 முக்கிய வணிகத் துறைகளில் குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வணிகங்களை வலுப்படுத்துவதே இந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதன் நோக்கம் ஆகும்.

தற்போதுள்ள “SME” வணிகங்கள் சமீபத்தில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கி புதிய உயரங்களை அளவிட விரும்புகின்றன, அவர்கள் எவ்வாறு தங்கள் சேவையை மேம்படுத்துகிறார்கள், தங்கள் ஆற்றல் மற்றும் லாபத்தை எவ்வாறு அதிகரிக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆலோசனைகளை பெறலாம்.

இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களான நீயா நானா கோபிநாத், சேரன் அகாடமி ஹுசைன், மானி பால், ஷோகாத் ஆகியோர் வணிகம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை மற்றும் தீர்வுகளை வழங்க உள்ளனர்.

தலைமை என்ற தலைப்பில் நீயா நானா கோபிநாத் உரையாற்றுகிறார். விற்பனை என்ற தலைப்பில் சேரன் அகாடமியின் வணிக பயிற்சியாளருமான ஹுசைன் அவர்களும் சேவை பற்றி ஷோகாத்அவர்களும் கேரளாவை சேர்ந்த மனநிலை பயிற்சியாளர் மானி பால் அமைப்பு கலாச்சாரம்’ என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் ரூ.1111, வி.ஐ.பி வகுப்பிற்கு ரூ.2111 சரியான அடையாள அட்டையுடன் வரும் எம்.பி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும்.1500 பங்கேற்பாளர்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள், ஏற்கனவே 500+ பதிவுகள் செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *