Soya Chunks 65: மொறு மொறு சோயா சங்க்ஸ் 65 ரெசிபி… செய்முறை இதோ…
1கப் சோயா சங்க்
2மேஜைக்கரண்டி சோள மாவு
2மேஜைக்கரண்டி கடலை மாவு
1மேஜைக்கரண்டி அரிசி மாவு
3பல் பூண்டு
1துண்டு இஞ்சி
½எலுமிச்சம் பழம்
¼மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1மேஜைக்கரண்டி கரம் மசாலா
1சிட்டிகை பெருங்காய தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை
இஞ்சி பூண்டை பேஸ்ட் தயார் செய்துவைத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீரில் சோயா சங்க்ஸ்சை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
30 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக எடுத்த பின் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு சோயா சங்ஸ் உடன் நாம் தயாரித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விட வேண்டும்.
இதில் சோள மாவு, கடலை மாவு, மற்றும் அரிசி மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சோயா சங்குகள் நன்கு மாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விடவும்.