ஸ்பெயின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரம்: காணாமல் போனவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
ஸ்பெயினின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
ஸ்பெயினின்(Spain) வலென்சியாவில்(Valencia) நகரில் உள்ள இணைந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பக்கத்து கட்டிடத்திற்கும் பரவியது.
இதில் 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 15 பேர் வரை காணாமல் போய் இருப்பதாகவும் அவசரகால மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து அவசர கால மீட்பு படையினர் பொதுமக்களை மீட்பதை பார்க்க முடிந்தது.
விபத்துக்குள்ளான அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 138 வீடுகளும், அதில் 450 பேரும் இருந்ததாக EL Pais அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் மற்றும் குழந்தை உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.
தீயினை அணைக்க வீரர்கள் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.